பக்கம்:செவ்வானம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 45 வைத்த பேர்வழிதான் இப்பொழுதும் மொட்டைக் கடிதம் எழுதியிருக்க வேணும் அவனோ அல்லது அவர்களோதான் இன்றையச்சுவர் விளம்பரத்தின்காரணஸ்தர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தான் அவன். முன்பு முதலாளி புன்னைவனத்தின் கலாமண்டபமுயற்சியைக் கண்டித்தபோதுதான் சிவப்பெழுத்து எச்சரிக்கை வந்தது. இப்பொழுது அவரைப்போன்றவர்களின் செயல்களைக் கண்டித்து எழுதிய புத்தகத்தின் பல்ன்தான் இவையெல்லாம் என்று நிச்சயித்தான் தாமோதரன். அன்றொருநாள் இரவிலே அவன் தெருவில் திரிந்த வேளையில் பின்னால் வந்துநின்ற காரிலிருந்து சிவசைலம் காதலி குமுதத்தின் நினைவோ!' என்று கிண்டல் சொல் எறிந்தது அவன் நினைவுக்கு வந்தது. முதலில் குமுதத்தைப்பற்றிக் கேலியாகக் குறிப்பிட்ட பெருமை முதலாளிக்கு நல்லபிள்ளைபோல் நடந்துதான் வாழ வசதிகள் செய்துகொள்ளும் சிவசைலத்தையே சேர்கிறது. பிற விஷயங்களுக்கும் அவர்தான் பொறுப்பாளியாக இருக்கவேண்டும் என்று முடிவுகட்டினான் அவன். இப்படி மனதை எண்ணங்களில் சுழலவிட்டு, கால்போனபோக்கிலே நடந்த தாமோதரன் வெயிலைப் பொருட்படுத்தவில்லை. பசியைப் பெரிதாக எண்ணவில்லை. எதையாவது வாங்கித்தின்று வயிற்றுத்தீயை அணைப்பதில் ஒருவாறு வெற்றிகண்டான் அவன். ஆனால் உள்ளக் கொதிப்பை, உருக்கும் சிந்தனைத் தீயை ஒடுக்கிவிட இயலவில்லை. வழக்கமாக அவன் செல்லும் அமைதியான தனி இடத்தை அடைந்தான். மரங்கள் பல நின்றதால் அங்கு நிழல் படிந்திருக்கும் நாள் முழுவதும். அங்கேயே ஒரு மரத்தடியில் சோர்வுடன் படுத்து விட்டான். தனக்காக வருந்துவதைவிட தாமோதரன் குமுதத்தின் நிலையை எண்ணியே துயருற்றான். இனி என்ன செய்வது? என்னைக் கண்டும் காணாமலும் இஷ்டம்போல் சொல் லெறிந்தவர்கள் அவளைக் காணும்போது மெளனமாகவா இருப்பார்கள்? செ. - 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/147&oldid=841358" இலிருந்து மீள்விக்கப்பட்டது