பக்கம்:செவ்வானம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捐翻尊 செவ்வானம் தெரிவிப்பதா. வருத்தம் அறிவிப்பதா என்றே எனக்குப் புரியவில்லை. நான் வாழவேண்டியிருக்கிற காலம் முழுவதும் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப இரண்டில் ஒன்றை நான் உங்களுக்கு அர்ச்சித்துக் கொண்டேயிருப்பேன்." - அவன் சிரித்தான் அதற்கு அதிக உரிமையும் வசதியும் தேடிக் கொண்டாய் இல்லையா? இளஞாயிறின் செவ்வொளி எங்கும் தகதகத்தது. காலையொளி அவள்முகத்தை அழகுரோஜாவாக மாற்றியது. எனக்கு வாழவளித்த உங்களை நான் ஏன் ஏசப்போகிறேன் என்னை நீங்கள் ஒரு சுமையாகக் கருதாமலிருந்தால்.” 'நீ சுமை அல்ல, குமுதம் என் வாழ்வின் துணை என்றான் அவன் தாமோதரனின் பார்வை உதய சூரியன் ஜொலிக்கும் கீழச் செவ்வானத்திலே படிந்தது. குமுதம், நமது வாழ்விலே புது உதயம் பிறந்திருக்கிறது. மக்களின் வாழ்விலே புதுயுகம் பூக்கவேண்டும். இருள் என்றும் நிலைத்திராது. ஒளி பிற்க்கத்தான் செய்யும் என்றான் அவன். புன்னகையைத்தான் பதிலாகத் தீட்டினாள் குமுதம்,

  • முற்றிற்று :
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/162&oldid=841375" இலிருந்து மீள்விக்கப்பட்டது