பக்கம்:செவ்வானம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3(; செவ்வாணம் அனுப்பி வைப்பதிலிருந்தே நல்லாப் புரியுதே' என்று கனைத்தது. மற்றுமொரு குரல். - 5 தாமோதரன் திகைத்து நின்றான். மறைந்து நின்று பரிகசித்துப் பழிக்கும் கயவர்கள் யார் என்று கொதிப்புற்றது அவன் உள்ளம். பிறர் தவறாகத் திரித்துக் கதைத்துவிடக் கூடும் என்று எண்ணியது. இந்த இரவிலேயே நடந்துவிட்டதே என்று துடித்தது அவன் இதயம் எந்த நாய் அங்கே ஊளையிடுகிறது? தடித்தனமாகச் சொல் சிந்தும் மடையன் எவனடா அங்கே மறைந்து நிற்பது? என்று கூவினான் தாமோதரன், இருளிலே பதுங்கி நின்று தன்னைப் பற்றிக் கேவலமாய் பேசுகிறவர்களின் ஒலி அவனுக்கு வெறியூட்டியதனால் தாமோதரன் உணர்ச்சிக் கொதிப்பிலே கத்திவிட்டான். உடனேயே எண்ணம் துடித்தது தான் செய்தது தவறு என்று நான் இப்படி கத்தியிருக்கக் கூடாது. அவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்களோ? என்ன செய்வார்களோ? ஓடி வந்து தாக்குவார்கள். படுகாயப்படுத்திவிடப்பாய்ந்தோடி வருவார்கள் பாவிகள் என்று முனங்கியது அவன் உள்ளம். அவன் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டது. - தன்னைத் தாக்க வரும் கயவர்களை எதிர்பார்த்து நின்றான் அவன் காத்து நிற்பது பயங்கரமான வேதனையாகத் தோன்றியது. கவிந்து கிடந்த காரிருளும், பேயமைதியும் பாழாய் பயங்கரமாய்க் கனத்து அவனை விழுங்கிவிடக் காத்திருக்கும் நாசச் சக்திகள்போல் கனத்தன. கணத்துக்குக் கணம் அவற்றின் அழுத்தம் அதிகரிப்ப தாகப்பட்டது அவனுக்கு. ஆனால் முன்னோடிவரும் கனத்த காலடி ஓசை காதில் விழவில்லை. மனித நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/32&oldid=841395" இலிருந்து மீள்விக்கப்பட்டது