பக்கம்:செவ்வானம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 செவ்வானம் அல்லது இனம் தெரியாத இந்தக் கயவர்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? - தாமோதரனின் உள்ளக் குகையிலே ஒலி எதிரொலிகள் தறுதலைத் தனம் பயின்று அவன் குழப்பத்தைத் தணித்துவிடாதபடி பாதுகாத்து வந்தன அவன் அந்த இடத்திலேயே நின்று நின்று பார்த்தான். பொறுமையைச் சோதிக்கும் அச்செயலை மேலும் சாதிக்கும் திறமையற்றவனாய், வருவது வரட்டும் என்று துணிந்தவனாய், வீடு நோக்கி நடந்தான். தன்னை யாரும் வேட்டையாடிப் பின் தொடரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது அங்கு கொலுவிருந்த அமைதியிலே, அமைதியைக் குலைக்கும் தனது காலடிகளின் சரட் சரட்டு சப்தம்தான் மனசிலே அரிப்பு தருவதாக ஒலிப்பதை அவன் உணர்ந்தான். வேகமாக நடந்தான். அவர்கள் யாராக இருந்தாலும் சரியே போய் விட்டார்கள், அன்றிரவு தன்னைத் தாக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை என்பது நிச்சயமாகிவிட்டது. துரத்தில் யாரோ யாரையோ சீட்டியடித்துக் கூப்பிடும் ஒலி எழுந்து மிதந்து வந்தது. பதிலுக்கு ஒரு 'விலில் பலமாகப் பிறந்து காற்றிலே கலந்தது. இன்று இந்தச் சூழ்நிலையே பயங்கர மர்மங்கள் நிறைந்த பிரதேசமாகிவிட்டது போலும் விபரீத நாடகங்களுக்கு ஒத்திகை நடைபெறும் இடமாகிவிட்டது' என்று நினைத்தான் தாமோதரன். சிரிப்பும் கூடவே எழுந்தது. அந்த நேரத்திற்கு ஆபத்து நீங்கியது என்ற உணர்ச்சி தெம்பு தரவே. அவன் மனச் சுமையைத் தணிக்கும் நெடு மூச்செறிந்து, கதவைத் திறந்து வீட்டினுள் போய் தாழிட்டுக் கொண்டான் இன்னும் விடியவில்லை. அப்பொழுது காலை மணி ஐந்து தானிருக்கும். இருள் விலகி ஒளி பிறக்க வானம் களம் அமைத்துக் கொடுக்கவில்லை இன்னும். ஆயினும் கண்களைக் குருடாக்கும் காரிருள் படுதா போத்திருக்கவில்லை உலகை வானிலே வைரப் புள்ளிகள் வைத்திழைத்த அற்புதக் கோலம் அழிக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/34&oldid=841397" இலிருந்து மீள்விக்கப்பட்டது