பக்கம்:செவ்வானம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 43 அங்கு மிங்கும் அலைந்து அவதிப்பட்ட அன்பர் சிவசைவம் கடைசியில் புன்னைவனத்தைச் சரணடைந்தார். பய புத்திசாலிதான் ஒரு மாதிரியான புளியங்கொம்பைப் பிடித்துக் கொண்டான் இனிமேல் அவனை யாரும் அசைக்க முடியாது' என்று சிலர் விமரிசனம் கூறினார்கள். அதைப் பொய்யாக்க முயலவில்லை சிவசைலம். அவர் வார்த்தைகளில், அவர் திறமையில் புன்னை வனத்துக்கு நம்பிக்கையும் மதிப்பும் ஏற்பட்டன அவர் சொல்கிறபடி எதையும் செய்வது என்று மாறிவிட்டார் அவர் தோன்றாத் துணையாய் , நண்பனாய், வழி காட்டியாய் வந்து சேர்ந்த சிவசைலம் தான் வாழ்வதுடன்தன்னை நம்பியவரையும் வாழ வைப்பது என்ற உறுதி பூண்டு உழைத்தார். அவர் யோசனை தான் கந்தர்வ கலா மண்டபம் அமைப்பது, அது வெற்றிகரமாக நிறைவேறியது. குறையின்றி நிறைவேற வேண்டிய விழாவில்தான் திருஷ்டிப் பரிகாரம் போல் வீணன் தாமோதரன் வேண்டாத வேலை பண்ணிவிட்டான். சிறு கலவரம் விளைந்து விட்டது. அவனை மிஞ்சவிடப்படாது. சரியானபடி பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்சிவசைலம் -- - அவர் தீர்மானம் செய்தது முதலாளி புன்னைவனத்துக்குத் தெரியாது. இரவில் வெகுநேரம் மனதைக் குழப்பிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென ஞானோதயமும் தூக்க உதயமும் ஏற்பட்டன. காலை உதயமாகி வெகுநேரமான பிறகும் விழிப்பு பிறக்கவில்லை. முதலாளி கண்விழித்த போது மணி ஒன்பது இரவில் பளிச்சிட்ட TET657GD நிறைந்திருந்தது அவர் உள்ளத்தில், பொறியாய் மேலே போய் வண்ண வ்ண்ண்ப் பூப் பொறிகளாக உதிர்த்து விஸ்வ ருபமெடுக்கும் வாணம்போல் அந்த நினைப்பு பெரியதாய், அகண்டதாய், அற்புதமாய் கிளைத்து மலர்ந்து குலுங்கித் திகழ்ந்தது. 'சிவசைலத்திட்ம் இதைச் சொல்லவேண்டும் உடனே செயல் புரியும்படி ஏற்பாடுகள் செய்யவேணும் என்ற துடிப்புடன் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/45&oldid=841409" இலிருந்து மீள்விக்கப்பட்டது