பக்கம்:செவ்வானம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செவ்வானம் அன்றாட அலுவல்களின் ஈடுபட்டார் முதலாளி. அதற்குள் வந்துசேர்ந்தார் அன்பர் ஆலோசகர் அனுபவ ஞானி சிவசைலம் 8 முதலாளி புன்னைவனம் எதையும் நிதானமாகத் தான் செய்வார். துங்கி எழுவதற்குக் காலையில் ஒன்பது ஒன்பதரையாகி விடும் குளித்து பூஜையில் உட்கார்ந்தாரென்றால், இந்த உலக நினைப்பு பெற்று பூஜை அறையை விட்டு வெளிவருவதற்குள் மணி பதினொன்றாகிவிடும். உடனே அருமையான சாப்பாடு. அதை முடிக்க அரைமணிநேரமாவது வேண்டும்.ஒவ்வொரு காரியத்திலும் இப்படித்தான். அவருக்குப் பிடிக்காத விஷயங்களில் அவசரம்' என்பதும் ஒன்று. ஆனால் சிவசைலத்தின் ஜீவனே'அவசரத்தில் தான் இயங்கிக் கொண்டிருந்தது பொதுவாகவே, காத்திருப்பது அவருக்குவேதனை. இன்று முக்கிய விஷயம் வேறு இருந்ததனால் அவர் பொறுமையை யிழந்துவிட்டார். புன்னைவனம் பூஜை செய்து கொண்டிருந்த இடத்திற்கே போனார். வழக்கத்திற்கு விரோதமாக முதலாளி பூஜையை வேகமாக முடிப்பதில் முனைந்திருந்தார் 'அஹஹ, சிவபூஜையில் கரடியோ?" என்று கனைத்தார் சிவசைலம் வாழ்க்கையை நாடக மேடை ஸ்டைலிலே வாழ்ந்தால் வாழ்க்கையில் ரசம் அதிகமிருக்கும். அலுப்புத்தட்டாது. நேற்றையப் போல இன்று, முந்தா நாளைப் போல நேற்று என்ற தன்மை இருக்காது என்பது அவரது ஞானோபதேசங்களில் ஒரு துணுக்கு. 'கைலாசம் போக விரும்பிய ஒளவையார் இப்படித்தான் விழுந்து விழுந்து பூஜை செய்தாளாம். அம்மையே, அவசரப்படாதே! நாமிருக்கப் பயமேன் என்று அருள்புரிய வந்தாராம் பிள்ளையார் அந்த லீன்தான் ஞாபகம் வருகிறது என்றார் சிவசைலம். பேசப்படுகிற பேச்சு ஒவ்வொன்றுக்கும் எதிரொலி வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. தனது பேச்சை மற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/46&oldid=841410" இலிருந்து மீள்விக்கப்பட்டது