பக்கம்:செவ்வானம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 செவ்வாணம் கொண்டுவரவேண்டும்; நம்மால் முடிந்த வரை பல நபர்களுக்கு ஆதரவளிக்க வேணும் என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் சில பேரு முதலிலே சான்ஸ் கிடைக்கிற வரை வளைய வளைய வருவது; அப்புறம் தங்களைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொள்வது என்று திரிகிறார்கள். அப்புறம் என்னாகுது? ஆதரிக்க ஆள் இல்லை என்றதும் அவங்க பின்னுக்குப் போய்விடுகிறாங்க இப்படி உண்மையை உண்மைக்காகவே பேசும் உத்தமர் போல் அறிவித்தார் அவர். - சேலைத் தலைப்பு அவர் மேல் தழுவிக்கிடக்கும்படி நெருங்கிவந்து விட்ட சாவித்திரி சொன்னாள். நான் அப்படி யெல்லாமில்லை. என் குணம் என் கூடப்பழகி பார்த்தால்தான் தெரியும்.' தங்கமான குணம்னு நல்லாத் தெரியுதே' என்று இளித்தார் அவர் அவளது கைகளைப் பற்ற முயன்ற வேளையிலே அவள் துள்ளி விலக்கினாள். "ஐயோடீ! உங்களுக்கு நான் காபி கொடுக்கலியே கொஞ்சம் இருங்க. இதோ ஓவல் கொண்டு வாறேன் என்று ஓடிவிட்டாள். வலுத்த குட்டிதான் போலிருக்கு உம், இருந்தாலும் புறா வலிய வந்து வலையிலே சிக்கிக் கொள்ளும் என்று புரியது என அவரது அந்தராத்மா உபதேசித்தது. இதற்குள் சியாமளாவும் மற்றவர்களும் வந்து விட்டனர். 'சனியன்கள் இன்னும் கொஞ்ச நேரம் தொலைந்து போயிருக்கப் படாதா?’ என்று புகைந்தது அவர் உள்ளம். வாங்க, வாங்க என்ற உபசரிப்பு பலமாக அடிபட்டது. 'அவள் எங்கே? உங்களைத் தனியாக உட்கார வைத்து விட்டு அவள் உள்ளே என்ன செய்கிறாள்? ஏண்டி சாவித்திரி, வந்தவரைக் கவனிக்காமல்.’ என்று அதட்டினாள் அம்மா. கையில் ஒவல் நிறைந்த கிளாலை ஏந்திய வண்ணம், முகத்திலே முழுநகை மலர அசைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/98&oldid=841467" இலிருந்து மீள்விக்கப்பட்டது