உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 101 பார்த்துக் கொள்கிறேன்; பாக்குக் கெடாதபடி பார்த்துக் கொள்கிறேன்; சோடா கேட்டால், ஐஸ் கலந்து தரட்டுமா என்று கேட்கிறேன்- கடையைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துக் கொள்கிறேன்--இதிலே புதிய சிரமமோ, கவ லையோ காணோமே! பாகவதராக இருந்தாலும் இல்லா விட்டாலும், கடை நடத்தினாலும், நாடகமாடினாலும், எந்தக் காரியத்தைச் செய்தாலும், நல்லவனுக்கு, திறமை சாலிக்கு, உண்மை உழைப்பாளிக்கு, அவன் எந்த வேலையைச் செய்தாலும், அதிலே அவன் ஒரு குறிப்பிடத்தக்கவனா வான்- இது இயற்கை; நீதி! இதை, பொறாமை, பொச் சரிப்பு, கலகம் எதுவும் மாற்றாது! நாடகக் கம்பெனியில் ராஜபார்ட்டாக இருந்தேன்; இப்போது கடை வீதியில், என்னை வெற்றிலை பாக்குக் கடைக்காரர் சங்கத்துக்குக் காரியதரிசியாக்கித்தான் இருக்கிறார்கள்" என்றான். அவன் நிலை மாறியிருந்தது-அதை அவன் நிம்மதி என்றான். அவன் நிலை மாறியிருந்தது கண்டு, நிந்திப்பவர்கள், 'பார்! ஆசாமி என்ன கதியானான்! வெற்றிலைக் கடை வைத்திருக்கிறானையா. ராஜபார்ட்!!' என்று ஏளனம் செய்தனர். ஆனால் ஒருவராவது, ரங்கன் ராஜபார்ட் நிலையை இழந்தும், குருமூர்த்தி கம்பெனி ரங்கனை இழந்தும், அந்த இருவருக்கும் நஷ்டம் அல்ல என்றபோதிலும், நாடகக் கலைக்கு ஒரு நஷ்டம்; அதை ஈடுகட்டவும் முடியவில்லை என்பதைப்பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. கலைநுட்பம் உணர்ந்த மிகமிகச் சிறிய தொகையினருக்கு மட்டுந்தான், இந்த நஷ்டம் தெரிந்தது. அவர்கள் ரங்கனைப் பார்க்கும் போது, அதிகம் பேசுவதில்லை; எதுவும் வாதாடுவதில்லை. அவர்கள் குருமூர்த்தியிடமும் எதுவும் பேசுவதில்லை. குருமூர்த்தி-ரங்கதுரை கூட்டுறவு, கம்பெனிக்கு இலா பமா, நஷ்டமா என்பதல்ல முக்கியமான பிரச்னை. கலைத் துறைக்கு. அவ்விதமான கூட்டுறவு நிச்சயம் தேவையா