உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ராஜபார்ட் ரங்கதுரை யிற்றே! அது எக் காரணத்தாலோ கெட்டுவிட்டதே! அத னால் கலைத்துறைக்கு நஷ்டந்தானே என்பதை அந்தச் சிறு தொகையினர் மட்டும் உணர்ந்து உருகினர். ஆனால் அவர் கள் சிறுதொகை! என்றைக்கேனும் ஒருநாள் சுரஸ்தானம் தவறி, யாராவது நடிகன் பாடும்போது, குருமூர்த்தியின் கண்களிலே நீர் தளும்பும். குருமூர்த்தி கம்பெனிக்கு நேற்று போயிருந்தேனப்பா! இப்போது நீ இல்லாததால் சோபிக் கவே இல்லை நாடகம்' என்று என்றேனும் யாரேனும் கூறும் போது, ரங்கதுரையின் கண்களில் நீர் தளும்பும். அவர்களின் கூட்டுறவின் கடைசிப்பலன், அந்தக் கண்ணீர்த் துளிகள்தான் போலும்!