உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சமூக சேவகி பதிலே, அவருக்கு அபாரமான நம்பிக்கை. சாருபாலா ஒரே மகள். எனவே, ஐயர் தன் சகதர்மிணியின் விருப்பத்தின்படி, சாருவுக்குச் சர்வ சுதந்திரம் கொடுத்திருந்தார். கோந்தை, வெளியே போகணுமானா, நீங்க ஆபீ சிலே இருந்து வருகிற வரை காத்திண்டிருக்கா காருக்காக! சிறுசா ஒரு கார், ஆஸ்டினோ, வாக்சாலோ வங்கிக் கொடுத் திடுங்கோ-- அது சாயந்திரமானா கிளப்புக்குப் போய்வரச் சௌகரியமாக இருக்கும்" என்று அம்மையார் கூறுவார்; அடுத்த வாரம், ஆஸ்ட்டின் வந்து நிற்கும், 'சாந்திபவனில்" அவ்வளவு செல்லமாக வளர்த்து வந்தார்கள் சாருபாலாவை! தங்கக் கொடி, அதற்கு வைரத்தில் பாத்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! தங்கமும் வைரமும் ஜொலிக்கும்- சாருவைப் போல பார்க்குமா, பேசுமா, சிரிக்குமா!! சாருபாலாவுக்கு, சளி ஜுரம் என்றவுடன் சாந்தி பவனம் அல்லோலகல்லோலப்பட்டது. சமையற்காரர் விசாரணைக்கு ஆளானார்! "கோந்தைக்குச் சளி இருப்பது தெரிந்தும், ஏன் வெண் டைக்காய் சாம்பார் செய்தாய்? சுத்த மண்டுடா, நீ என்றார் ஆபீசர். தோட்டக்காரன் கேள்வித் தாக்குதலில் சிக்குண்டு தவித் தான். 'ஆறு மணிக்குமேல், சாரு தோட்டம் வந்தபோது, ஜில்லென்று பணிவாடை அடித்ததே, ஏன் அதைச் சொல்லி உள்ளே போகச் செய்யவில்லை' என்று கேட்டனர். வேலைக்காரிகள் கண்டிக்கப்பட்டனர்-மோட்டார் டிரைவர் எச்சரிக்கப்பட்டான்--- இவ்வளவும், 101--இருந்தபோது! சாருவுக்கு 'ஏண்டி,இப்படி வீணா உடம்பைப் போட்டு அலட்டிக் கறே, அப்பாவோட மனதுக்கும் சங்கடம் உண்டாக்கறே! நான் இப்பத்தான் தர்மாமீடர் வைத்துப் பார்த்தேன்; 101 சொன்னாள்--மனது தான் இருக்கிறது”-என்று சாரு கேட்கிறதா, கடைமட்டும் சிவந்திருக்கும், கண்கள் இப்போது