உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாருபாலா 105 முழுவதும் இலேசாகச் சிவந்து காணப்பட்டது. முகம் எப் போதும் பளபளப்பு தான். இப்போது புது மினுமினுப்புத் தெரிந்தது. பேசும்போது நாலைந்து தடவை இருமலும் இருந்தது- கவலைப்படாதே என்று சொன்னால், மனம் கேட்கிறதா? டாக்டர் வரவழைக்கப்பட்டார். டாக்டர் இரகுராமன், அரும்பு மீசைக்காரன்- ஐயர் தான்--ஆனால் ஏதோ இந்த மீசை வைத்துக் கொள்ளத் தங்களுக்குத்தான் தெரியும் என்று பார்ப்பனரல்லாதார் பெருமை பேசிக் கொள்கிறார்களே, என்னால் மட்டும் முடியாதா யார் என்று 'சவால்' விட்டுவிட்டு, மெடிகல் காலேஜில் ஆரம்பித்தார் மீசை வளர்க்க! மீசையும் அழகாக அமைந்திருந்தது. டாக்டர் இரகுராமனுக்கு எந்த மங்கையையும் மயக்கும் அலாதியான அழகு தன்னிடமிருப்பதாக, பல ஆண்டுகளாக நம்பிக்கை. பெண்களிடம் பல்விளிப்பதும், அவர்களின் அழ கைக் கண்டு வாயைப் பிளப்பதும், அவர்கள் பேசினால் மெய் மறந்து போவதும், அவர்களிடம் பேசினால் குளறிக் கொட்டு வதும் ஆடவரில் அசடரின் செயல். ஒரு அலட்சியமான பார்வை, ஒரு சிறு புன்னகை, ஒரு விநாடியில் அதுவும் மறைந்துவிட வேண்டும்- பெண்களிடம் இவ்விதம் நடந்து கொண்டால்தான் அவர்களுக்கும் சுர்வபங்கம் ஏற்படும் என பது டாக்டரின் மருத்துவமுறை- கல்லூரி நண்பர்களிடம் அடிக்கடி கூறிவந்திருக்கிறான். நூக்கமரக் கட்டிலில், டபேடா உறை போட்ட மெத்தை தலையணை போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஐந்தாண்டுத் திட்டத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று எழுதப் பட்டு. நேரு பண்டிதருடைய படம்- பாரதமாதா படம், சுவரிலே! மேஜைமீது, பாரதியார், சரத்சந்திரர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர்! ஜன்னலில், ஒரு புத்தர் சிலை சிறிய மூளியா கிப் போன நிலையில். பக்கத்தில் சாயிபாபா சிலை, புத்தம் புதியது. கட்டிலின் மீது அந்தக் கட்டழகி கண்களை மூடிக் கொண்டிருக்கும நிலை! ஆனால் கன்னத்தில் "அழகுக்குழி" காணப்பட்டது - ஏதோ உள்ளூர ஒருவகையான சந்தோஷம்;