உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கத்தில் நரகம் 119 விண்ணுலகத்துத் தருக்கள் யாங்கள் என்று கர்வம் கொண்டிருப்பதுபோல தேவதாரு மரங்கள் ஓங்கி வளர்ந் திருந்தன. எம்முடன் அடிக்கடி வானவில் போட்டியிட்டுத் தோற்று மறைவது வாடிக்கை என்று கூறுவது போலப் பல வண்ணப்பூக்கள் நிரம்பிக் கிடந்ததோர் பொழில். குழலும் யாழும் என்ன இனிமையைத் தரமுடியுமோ அதை இதோ நாங்கள் தருகிறோம், கேண்மின் என்று கூறுவதுபோல சிற் றாறு ஓடிக்கொண்டிருந்தது. எங்கும் மணம் - விழாக்கோலம்! பாசிபடராத, தூசு விழுந்தால் தெரிந்துவிடத்தக்க தெளிந்த நீர்கொண்ட தடாகம். 'ஸ்படிகக்' கண்ணாடியில் தமது முக "இலாவண்யததை" கண்டு களித்திடும் காரிகையர்போல மலர் சுமந்து கிடந்த தருக்கள் தமது வனப்பைக் கண்டு மகிழ்வதற்காகவே இந்தத் தடாகம் ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம். அந்தத் தடாகத்துப் படிக்கட்டுகளில் அமர்ந்து ஓரோர் சமயம் தேவலோக மாதர் பொழுது போக்குவர். இதை அறிந்து, தமக்கு எத்தகைய விருந்து வேண்டும் என்று தேர்ந்தெடுக்க அங்கு மாலைப் போதினில் தேவர்கள் 'அலங் கார புருஷர்களாக' உலவ வருவர், இங்கு அமர்ந்திருக்கும் போது, தேவமாதர் தத்தமது அல்லல், அனுபவம பற்றிப் பேசிப் பேசித் தமது ஆயாசத்தைப் போக்கிக் கொள்வர் போலும். அவர்களுக்கு என்ன தொல்லை நேரிட முடியும்? தாங்க முடியாத குடும்ப பாரமா? தொட்டுத் தாலி கட்டின வன் விட்டுப் பிரிந்ததால் வந்துற்ற துயரமா? தொட்டதெல் லாம் தங்கமாகும்; அவ்வளவு பாக்யவான் இவன் என்று ஜோதிடரும் தரகரும் கூறியதால், மணமகனாக்கப்பட்ட வன், வெறும் மண்ணாங்கட்டி என்பது, போகப் போகத் தெரிந்தால் புலம்பிக் கிடக்கும் பூலோகத்துப் பூவையர் போலவா தேவ மாதரின் நிலை இருக்கும்? அவர்களுக்கென்ன குறை? இந்திர சபையில் நடனம், சந்திரனின் சல்லாபம், அக்கினியே ஓடைக்குளிர் மதிப்பார்வை காட்டுவான்!உண்ண அமுதம், உடுத்திட தேவலோசப்பட்டாடைகள்! நடந்திடும் பாதையோ மலர் தூவியன! இவர்களின் போக போக்கியத் துக்கு என்ன குறை? என்றுதான் எவரும் எண்ணுவர். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்-இதயக் குமுறலைத் தரத்