உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சொர்க்கத்தில் தக்கது என்பது அவர்கள் பளிங்காலான படிக்கட்டுகளில் அமர்ந்து பேசும்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. தேவமாதர்களின் முகத்திலே ஒரு துளியும் கவலையின் கீறல்கள் தெரியக் காணோம். உள்ளத்தில் ஓராயிரம் சோகக் கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்ட றிய முடியவில்லை: அவர்கள் இருளுக்கு ஒளி ஊட்டும் பேரழ குடன் காணப்பட்டனர். பூலோகத்திலல்லவா, தங்கம் நாலாறு ஆண்டுகளில் பித்தளையாகிப் போகிற நிலைமை! 'கனகாவா? நிஜமாகவா? அட பாவமே! மான் குட்டி போலத் துள்ளி ஓடுவாளே! பழத்தோட்டங்களிலே புகுந்து அவள் ஆடிடும் ஆட்டம் கொஞ்சமா? சிறிதும் பயமறியாதவ ள. யிற்றே! யாரையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி விடுவாள்; கோபம் கொண்டு தாக்க வந்தாலோ ஒரே புன் னகையால் அவர்களை வென்றுவிடுவாளே!எவ்வளவு கவர்ச்சி கரமான கண்கள் குவிந்து சிவந்து இருந்த அந்த அதரத்தை, கொவ்வை என்றெண்ணிக்கொண்டு கிளிகள் கொத்த வருமே! அந்தக் கனகாவா இது? தலையில் நரை! முகத்தில் கவலைக் கோடுகள்! கண்ணொளி எங்கேயோ போயேவிட்டது. அந்த அதரம்? அடடா, இப்படியா சுக்காகிக் கிடக்க வேண்டும். கலகலப்பான பேச்சு காணோம். பேசத் தொடங்கும் போதே பெருமூச்சும் கிளம்பிவிடுகிறது. நடையிலே ஓர் தளர்ச்சி! பாபம்! பரிதாபம்! இத்தனைக்கும் இப்போது வயது என்ன ஆகிவிட்டிருக்கும்? முப்பது அல்லது முப்பத்தி இரண்டுதானே இருக்க முடியும். இதற்குள்ளாகவா இந்த "ஒளவையார் கோலம்" என்று பேசும் இடம் பூலோகம். இவர்களுக்கு என்ன! இன்பவல்லிகள்!! எனினும் அன்று அவர்கள் ஆயா சத்துடன் பேசினர். ரம்பை, மேனகாவின் கன்னத்தில் காணப் பட்ட 'வடுக்களை'க் காட்டினாள் திலோத்தமையிடம். பாவம்!" என்று பரிதாபம் தெரிவித்தாள் திலோத்தமா "மேனகா! அலங்கோலமாக இருக்கிறாயே கண்ணே! நெடுந்தூரம் போய் வந்தாயோ!" என்று திலோத்தமா கேட்டாள்.