உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சொர்க்கத்தில் என்றால், சிறிது நேரத்துக்கு முன்புவரை ‘அன்னமே! சொர்ணமே! அமுதே!கனியே!'என்று இளித்துக் கிடந்தான். 'தங்கள் அந்தஸ்துக்கு இது அடுக்காது.வேண்டாம் அபசாரம், என்று நான் தடுத்தும், என் பாதம் வருடி, தேவலோகத்திலே பாதைகளில் மலர் தூவி வைக்கிறார்களல்லவா? இல்லையா னால் இந்தப் பாதம் நொந்து போகுமே என்று பேசிக் காமம் கக்கினான். காரியம் முடிந்தானதும், 'கடுந்தவம் செய்வோன் நான். காரிகையே! என்ன காரியம் செய்தனை! என்ன காரி யம் செய்தனை!' என்று கூறி மிரட்டலானான். என்ன செய் வது? கோழியும் அதன் குஞ்சுகளைக் கொத்த வல்லூறு வட்டமிடக் காணும்போது சீறுகிறது... போரிடவும் செய் கிறது. நான் என்ன செய்ய முடிந்தது? குழந்தையை, புலியும் பிறவும் உலவும் பெருங்காட்டிலே விட்டுவிட்டு வரவேண்டி இருக்கிறது!! என்று கூறி விம்மினாள் மேனகை. "மேனகா, அழாதே! அந்தக் காட்டிலே, கண்மூடித் தவம் புரியும் தவசிகள் மட்டுமா? வேடர்கள் இருப்பார்கள். அவர்கள் குழந்தையிடம் அன்பு காட்டத் தவறமாட்டார்கள். குற்றம் அந்த முனிவன்மீதுகூட அல்லடி அம்மா! சுவையுள்ள கனி குலுங்கும் மரத்தைக் காண்பவன், ஏறிப் பறித்தோ கல்லால் அடித்தோ, பழத்தைப் பெறுகிறான்; உண்டு மகிழ் கிறா. ஒரு நொடிப் பொழுதில், சுவை தந்த தருவினை மறந்துவிடுகிறான். அதேதான், ஆடவர் போக்கு! அதிலும் நாம் சந்திக்கும் ஆடவரின் போக்கு!! அவர்கள் ஆண்டவனை சந்தித்து 'ஆனந்தம்' பெறும் பாதையில், !இடையில் நம் மைச் சந்திக்கிறார்கள், இன்பம் பெறுகிறார்கள், பிறகோ நம்மை நிராகரித்துவிடுகிறார்கள்.. மீண்டும் புனிதப் பயணத் தைத் தொடங்கிவிடுகிறார்கள். நாம்? வீசியெறியப்பட்ட மலராகி விடுகிறோம். கசக்கிப் போடப்பட்ட கனியாகி றோம். நாம் இத்தகைய கொடுமைக்கு உட்பட்டுக் கிடப்பது மடமை. தேவலோகவாசம் தேவதேவனின் தரிசனம் என்ற மயக்கம் நம்மை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிடுகிறது. பூலோ கத்தில் உள்ளவர்களுக்கு மூப்பு, பிணி, சாவு உண்டு...சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்.. இளமை மாறாது, அழகு