உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் 127 குன்றாது, நினைக்கும் வடிவம் எடுக்கவல்லோம், இந்த விநாடி விண்ணகத்திலிருப்போம், மறு விநாடி மண்ணுலகு செல்வோம். அவ்வளவு மகத்துவம் இருக்கிறது எங்களுக்கு என்று பூரித்துக் கிடக்கிறோமே, அதனால் வந்த வினை இது...எவனெவனுக்கோ பெண்டாகி, எவருடைய அன்பை யும் நிரந்தரமாகப் பெற முடியாமல், கட்டித் தழுவிடும் காதலனையும் பெற்றெடுக்கும் செல்வத்தையும் கைவிட்டு விட்டு, இங்கு வந்து கண்ணீர் வடிக்கிறோம்; நாமாகத் தானே இந்த 'நரக' வாழ்வைப் பெற்றுக் கொள்கிறோம் சொர்க்கத்தில்! நமக்குச் சிறிதளவாவது சிந்தித்துச் செய லாற்றும் சக்தி இருந்தால், இந்த வாழ்க்கைக்குச் சம்மதித் திருப்போமா? சகித்துக் கொள்கிறோம். சர்வேஸ்வரன் கட்டளை என்று எண்ணிச் சிரம் சாய்க்கிறோம்..." என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் திலோத்தமை. 'கொண்டவளைக் கைவிடாதே, கண்டவளுடன் கூடி அழியாதே, காமுற்றுத் திரியாதே, கதியற்ற கன்னியரைக் கெடுத்திடாதே. போக போக்கியத்தில் புரளாதே" என்றெல் லாம் எவ்வளவு அற்புதமான போதனைகள் தருகிறார்கள் பூலோகத்தில்--திலோத்தமா ! ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை, பிறர்மனை நாடாமை, வஞ்சித்து ஒழுகாதிருத்தல் போன்ற அருங்குணங்களை அவர்கள் போற்றி வருகிறார்கள். ஒழுக்க நெறி தவறுவோனை இகழ்கிறார்கள்- தண்டிக்கிறார்கள். இப்படிச் சீலத்தோடு வாழ்கிற பூலோகம் வேண்டாமென்று, இங்கு வந்து காமச் சேற்றை தெய்வீகமாகக் கொண்டு உழல் கிறோம். இதை எண்ணும்போது, எனக்குத் திலோத்தமா! அழுவதா, சிரிப்பதா என்று தெரிவதில்லை. ஐயன் ஒழுக்கம் தவறுபவனை நரகத்தில் தள்ளுவான், என்று அங்கே பூலோ கத்தில் உள்ள மக்கள் நம்புகிறார்கள்--அஞ்சுகிறார்கள்- பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். கடவுளிடம் நெருங் கிய தொடர்பு கொண்ட தோழர்கள் நாங்கள் என்று கூறி விடும் சிலர், ஒழுக்கக் குறைவையே தனிச் சிறப்பாகக் கொண்டு, ஐவர் ஒரு அழகியைக்கூடி மகிழ்கிறார்கள். சாமான் யர்களோ, ஒழுக்கத்தை ஓம்பி வருகிறார்கள். அப்படிப்பட்ட