உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோசிக்கிறார் 137 தேவி - கேவலப்படுத்துகிறார்கள்; போலீசின் பாதுகாப்பிலே வாழவேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார். கள் என்னை" என்று கூறினார். 'கேவலப்படுத்தினார்களா? யார்?" என்று தேவி ஆச் சரியத்துடன் கேட்டார். அவரைக் கேலி செய்வதைப்போல கருப்பண்ணர், 'யார்!' என்று ஒரு முறை கூறிவிட்டு, "நாஸ்திகர்கள் கேவ லப்படுத்தினார்கள் என்று கருதுகிறீரா தேவி! அவர்களல்ல. அவர்கள் மனிதருடன் பழகுவதும் மனிதர்களின் பிரச்னை களைக் கவனிப்பதுமாகக் காலந் தள்ளுகிறார்கள். என்னைக் கேவலப்படுத்தியது, பக்தர்கள்! கைகூப்பித் தொழுது,கன் னத்தில் போட்டுக் கொள்கிறார்களே, கற்பூரம் கொளுத்து கிறார்களே, அந்தப் பக்தர்கள்தான், என்னை, செச்சே! இப்போது எண்ணிக் கொண்டாலும் எனக்கே வெட்கமாக இருக்கிறது. கேவலப்படுத்தினார்கள் - போலீசாரின் துணை யால் நான் மீட்கப்பட்டேன்" என்று கூறினார். தேவிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 'கருப்பண்ணரே! என்ன பேசுகிறீர்? பக்தர்கள்- போலீஸ் - ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பேச்சாக இருக் கிறதே" என்றார். என் தேவி! கேள் இந்த விஷயத்தை. இந்த பக்தர்களை இன்னின்னது செய்யுங்கள் என் மனமகிழ்ச்சிக்காக, இன்னின் னது படையுங்கள் என்று நான் கேட்டதுமில்லை - அவர்களா கவே வருகிறார்கள்—அவரவர்கள் மனதுக்குத் தோன்றிய படி ஏதேதோ செய்கிறார்கள். நான்' சிவனே என்று, எல்லா வற்றுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பொறுமை, பெருந்தன்மை, இவைகளைக் கண்டு, இந்த பக்தர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு கொண்டு." கருப்பண்ணரின் தொண்டை அடைத்துக் கொண்டது துக்கத்தால்! தேவியின் ஆச்சரியம் அதிகரித்தது. "துணிவு கொண்டு... சொல்லும் கருப்பண் ணரே! துணிவு கொண்டு..." என்று ஆவலை வார்த்தைக