உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I38 கருப்பண்ணசாமி ளாக்கினார் தேவி. ஆத்திரத்துடன் கூறினார் கருப்பண்ண சாமி. "ஒரு அறையிலே போட்டு பூட்டி விட்டார்கள்!" என்றார். தேவிக்கும் இலேசாகத் திகில் ஏற்பட்டது. "பூட்டிவிட்டார்களா? உன்னையா? பக்தர்களா?- என்று திசைப்புடன் தேவி கேட்டார்கள். "கேட்பதற்கே இவ்வளவு திகில் பிறக்கிறதே தேவி யாரே! என் மனம் என்ன பாடுபட்டிருக்கும், என்னை ஒரு அறையிலே போட்டு பூட்டினபோது! நான் என்ன கழனி வேலை செய்யும் கருப்பனா, சாமி சாமிவிட்டுவிடுங்க- என்று கதற? நானோ அவர்கள் கும்பிட்டு வரங்கேட்கும் கருப் பண்ண ஸ்வாமி! அவர்களோ என்னையே அறையிலே தள்ளிப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். நான் என்ன செய்வது?- என்று கூறி, ஆயாசமடைந்தார் கருப்பண்ணசாமி. தேவி, உண்மையிலேயே அனுதாபப்படத் தொடங்கி னார்கள். கேவலமான நிலைமைதான் இது. பக்தர்கள், உன் னைச் சிறையில் போடுவதுபோல அல்லவா செய்து விட்டி ருக்கிறார்கள் என்று பேசினார் சோகமாக. "தேவி! உன் காதிலே, அவர்கள் அப்போது போட்ட கூச்சல் விழுந்திருந்தால் தெரிந்திருக்கும், அவர்களின் டோக் கும் குணமும். போட்டுப் பூட்டடா, என்ன நடந்துவிடு துன்னு பார்க்கலாம்" என்று ஒருவன் கொக்கரிக்கிறான். வன். "பெரிய பூட்டு கொண்டு வா" என்று கூவுகிறான் ஒரு "அலிகார் பூட்டு வேண்டுமா " என்று கேட்கிறான் இன் னொருவன். இவ்வளவு கூச்சல், துணிவு! "போட்டுப் பூட் டுங்க, பார்க்கலாம், எவன் வத்து என்ன செய்து விடுகிறான்'" என்று கூவி, தேவி! என்னை ஒரு பெரிய அறையிலே போட்டு பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். வெளியே சிரிக்கிறார்கள்- இனி பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று! நான் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறேன்