உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கருப்பண்ணசாமி பாற்று'ன்னு. பைத்யக்காரத்தனம்தானே அது. அதுபோல இதுவும் ஒரு பைத்யக்காரத்தனம். உண்மையைச் சொல்லப் போனா, தேவி! அப்படிப்பட்ட பைத்யக்காரத்தனத்தை நாம் வளரவிட்டது தவறு. இல்லையா? என் விஷயத்தைக் கேள், தேவி! இந்தப் பக்தர்களுக்கு, நான் தங்களுடைய 'சாமி வேறு யாரும். தங்களுடையதுன்னு 'தவதை கொண்டாடினாலும் விட்டுக் கெட்டுக்கக் கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதற்குத் தகுந்தபடியே நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.நான், நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு. பக்தர்கள் கூட்டம் பெருகுவது கண்டு எனக்கும் பெருமை யாகத்தான் இருந்தது. என் போறாத வேளை! என் பக்த கோடிகள், இரண்டு கோஷ்டியாகப் பிரிந்து அவர்களுக்குள்ளே தீராத பகை ஏற்பட்டுவிட்டது. அவர்களுடைய பகை எனக் குப் பெரிய ஆபத்தாக வந்து சேரும் என்று நான் கண்டேனா நான் என் வேலையைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். வழக்கமாக எனக்கு நடத்துகிற உற்சவத்தை நடத்தினார்கள். எனக்கு மகிழ்ச்சி-தேரும் திருவிழாவும் வீண் வேலை என்று ஊருக்குப்போய்ச் சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் பேச்சிலே மயங்கி, எங்கே என் பக்தர்கள் - இந்த வருஷம் உற்சவத்தை நடத்தாமல் இருந்துவிடுகிறார்களோ என்று எனக்கு இவேசாசப் பயம். அவர்கள் உற்சவத்தை வழக்கப்படி நடத்த முன்வரவே, நான் மகிழ்ச்சி அடைந் தேன் -- எவ்வளவு பிரச்சாரம் நடைபெற்றாலும் நமது செல் வாக்கு போய்விடவில்லை என்று எண்ணிப் பூரித்துப் போனேன். வருஷா வருஷம் வைகாசி மாதம் உற்சவம் நடத்துவார்கள் எனக்கு. கருப்ப உடையார் தலைவர், உற் சவம் நடத்திய பக்தர் குழாத்துக்கு. வழக்கப்படி ஊர்வலமாக என்னை அழைத்துச் சென்றார்கள். 'பயல்களே! பகுத்தறிவு சுயமரியாதை என்று கத்திக் கொண்டிருக்கிறீர்களே பாருங்களடா, பக்தர்கள் எனக்கு உற்சவம் கொண்டாடு வதை!” என்று கூறிட எண்ணினேன்— ஆனால் அந்தப் பயல் கள் ஒருவன்கூடக் காணோம் - எங்காவது மகா நாடு பொட்டிருப்பான்கள் போலிருக்கு. சந்தோஷமாகப் பவனி வந்தேன். எப்போதும்போல என்னைக் கொண்டுபோய்