உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' யோசிக்கிறார் 141 மண்டபத்தில் கொலுவிருக்கச் செய்தார்கள். பக்தர்கள் என்னை வந்து தரிசிக்க அதுதானே நல்ல ஏற்பாடு. நானும் மண்டபத்தில் கெம்பீரமாக வீற்றிருந்தேன். ஒரு பக்த கோடிகள் இரண்டு 'கோஷ்டி'யாகி இருந்தனர் என்று சொன்னேனல்லவா- உற்சவம் செய்தது கோஷ்டி - கருப்ப உடையார் கோஷ்டி- மற்றொரு கோஷ்டி பிச்ச உடையார் நடத்தி வந்தார்-- அந்தக் கோஷ்டியும் என் பக்தர்கள்தான். அந்த இரண்டு 'கோஷ்டி'க்கும் பகை! இரண்டு கோஷ்டிக்கும் என்னிடம் பகை ஏற்படக் காரணமே கிடையாது. மண்டபத்தில் இருந்த என்னை மீண்டும் கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடிற்று கருப்ப பக்தர் கோஷ்டி. " 'தூக்காதே! எடுக்காதே!" என்று கூவிற்று பிச்ச பக்தர் கோஷ்டி. "நீங்கள் யாரடா, தடுக்க- எங்க கருப்பண்ணசாமிக்கு நாங்கள் உற்சவம் நடத்துகிறோம்-எங்கள் இஷ்டப்படி நடத்துகிறோம்-உல முடிந்தது. கொலு முடிந்தது- கொண்டு போகிறோம் கோயிலுக்கு- நீங்கள் யார் தடுக்க? என்று கருப்ப பக்தர் கோஷ்டி பதில் கூறிற்று. தொடாதே!- என்று அதட்டிப் பேசினர் பிச்சை பக்தர் கூட்டத்தினர். 'தூக்கு! தூக்குடா! என்று அதிகாரக் குரலில் பேசி னர் கருப்ப பக்த கோஷ்டியினர். "வெளியே கிளப்பினே - கொலை விழும்-- ஆமாம் சூரப் புலிகளோ! தூக்குடா சாமியை." "வேண்டாம் வீணா தொல்லைப்படாதீங்க.' கருப்பண்ணசாமியை நாங்க எங்க இஷ்டப்படி தூக் கிக் கிட்டுப் போவோம்." "கருப்பண்ணசாமி, எங்க சாமிடா!" " 'இல்லே, எங்க சாமிடா, கருப்பண்ணசாமி.