உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 "கையை வெட்டிவிடுவேன்." "காலை ஒடித்துவிடுவோம்.' " கருப்பண்ணசாமி தேவி! இரு பிரிவும் இப்படிக் கொக்கரித்தன - தான் மண்டபத்திலே கொலு இருக்கிறேன்! என்னைக் கொண்டு போய் பழையபடி கோயிலில் சேர்த்துவிட வேண்டும் என்று ஒரு பிரிவு முயற்சி செய்கிறது - இன்னொரு பிரிவு, கூடாது என்று கூறித் தடுக்கிறது. நான் என்ன செய்வது! இரு பிரி வினரும் என் பக்தர்கள். நான் யார் பக்கம் சேரட்டும்? சேர முடியும்? இரண்டு பிரிவும் சண்டை போட்டுக் கொள்ளட் டும். நாம் கோயிலுக்குப் போய்த் தொலைப்போம் - இரு பிரிலின் தயவும் வேண்டாம் என்று எண்ணம் பிறந்தது- ஆனால் எப்படிக் கோயிலுக்குப் போவது? நான் திண்டா டிப் போனேன், தேவி! திகைத்துப் போனேன். பட்டிக்காடுகளிலே, கலியாணத் தகராறு கிளம்பிவிட் டால், 'பெண்ணைக் கொண்டுவா' என்று ஒரு கூட்டம் கூவ. 'பெண்ணைக் கொண்டுபோகாதே'என்று மற்றொரு கூட்டம் கூவ, இரண்டு கூட்டத்தின் சச்சரவிலே சிக்கிய பெண், புலம்பு வது உண்டு. என் நிலை அது போலாகிவிட்டது. ஆனால் நான் புலம்பலாம்! நானோ சாமி! என்னை இந்தக் கொடு மைக்கு ஆளாக்கினவர்களோ என்னைப் பூஜிக்கும் பக்தர் கள்! என்ன செய்வது நான்? "கோயிலிலே கொண்டு போய், ஸ்வாமியைச் சேர்ப் பதுதான் நியாயம்" என்று கருப்ப பக்தக் குழாம் கூறிய படி இருந்தது. பிச்சை பக்தர் குழாமோ, விவகாரத்தைத் தீர்த்துவிட்டு, சாமியைத் தொடு-விவகாரம் பைசலாகாத தற்கு முன்னே தொட்டா, விடமாட்டோம்" என்று கூறு கிறது. அட, பாவிகளா! உங்களுக்குள்ளே,ஏதாவது விவகாரம் இருந்தா என்னை ஏன்அதுக்காகச் சீரழிவு செய்கிறிங்க. நான் கோயிலுக்குப் போன பிறகு, உங்க விவகாரத்தைப் பேசி, பைசல் செய்து கொள்ளக்கூடாதா? என்னை இப்படி அவ