உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோசிக்கிறார் 145 நடக்க உடைத்து, என்னை வெளியே விட்டார்! அந்த நல்ல மனு ஷன் இந்த உபகாரம் செய்ய வந்தாரே,அவரைச் சும்மா விட் டாங்களா? எப்படி பூட்டை உடைக்கலாம்-பார், என்ன செய்கிறோம் - எங்க கருப்பண்ணசாமியை நாங்க பூட்டி வைக்கிறோம்--மாட்டி வைக்கிறோம். எங்க இஷ்டப்படிச் செய்கிறோம், நீ யார் கேட்க- பூட்டை உடைக்கலாமா?" அப்படி இப்படின்னு, அவரைச் சூழ்ந்து கொண்டாங்க. அவர் என்ன, என்னைப் போலவா, வாயை மூடிக் கிட்டுக் கிடப்பாரு - ‘மரியாதையா நடங்க- சட்டப்படி வேணும்'னு சொல்லியிருக்காரு--கேட்கல்லே!போலீசாரைக் கூப்டாரு. போடுங்கடா பூஜை'ன்னு உத்திரவு போட்டாரு. தூக்கினாங்க, தடியை: அடிச்சி விரட்டினாங்க, தேவி! அப்பத் தான் என் மனம் கொஞ்சம் நிம்மதியாச்சி. பக்தனுங்கன்னு பேர் வைத்துக் கொண்டு, என் எதிரே கன்னம் கன்னம்னு போட்டுக் கொண்டு, கற்பூரம் கொளுத்திக் காட்டிகிட்டு இருக்கிறவங்க, நீதி நியாயத்தைக் கவனிக்காமல், ஈவு இரக் கம் காட்டாமல், பழி பாவத்துக்கு அஞ்சாமல், சாமியை இந்த அலங்கோலப்படுத்தலாமான்னு யோசிக்காமே, நெஞ். சழுத்தத்தோட, என்னைப் பூட்டிப் போட்டு விட்டாங்க கேவலப்படுத்திவிட்டாங்க. நான் என்ன செய்ய முடிந்தது? எந்தப் புண்யவான் வந்து வெளியே விடுவாரோ- எத்தனை காலம் இங்கே அடைபட்டுக் கிடக்கவேணுமோ - எவனெவன் கேலி செய்கிறானோ'ன்னு எண்ணி எண்ணி ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளையா வால்குடிகாரர், தங்க மான மனுஷன்! அவர் புள்ளெ குட்டிக சுகமா இருக்கணும். என்னை வந்து வெளியே கொண்டு வந்து சேர்த்தாரு-- தேவி! இந்தப் பாடுபடுத்திவிட்டாங்க, பக்தர்னு சொல்லிக் கொள்கிறவங்க- அதனாலேதான் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டுது - நிஜமாச் சொல்றேன். இனி இந்த பக்தர்களை நம்பிப் பிரயோஜனமில்லே- ஏதோ பூஜை செய்கிறாங்க ளேன்னு பூரிப்படையறதிலே அர்த்தமில்லே.இனி நமக்கு அவங்க தயவு வேண்டாம் - சகவாசமே கூடாதுன்னு தோணி விட்டுது' - என்று கருப்பண்ணசாமி தன் கதையைக் கூறி முடித்தார். தேவியும், கதையைக் கேட்டுக் கலக்கம்