உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அடைத்தார்கள். கருப்பண்ணசாமி "ஆமாம்! இனி இந்தப் பக்தர்களை நம்பக்கூடாது' என்று தேவியும் தீர்ப்பளித்தார்கள். "நாம் இரண்டு பேரும் மட்டும் தீர்மானித்தால் போதுமா தேவி! நம்ம கூட்டம் பெரிதல்லவா? எல்லோ ருக்கும் எடுத்துச் சொல்லி, இனி இந்தப் பக்தர்களிடம் நாம் சிக்கிச் சீரழிவு படக்கூடாது. பக்தர்கள் வேண்டாம்" என்று தீர்மானம் நிறைவேற்றினால்தானே நல்லது என்றார் கருப்பண்ணசாமி. . 'ஆமாம். கருப்பண்ணரே! பக்தர்களால் நம்மவர் களுக்கு ஏற்பட்டுவரும் சீரழிவுகளையும், எத்தர்கள் ஏமாளி களை ஏய்க்க நம்மைக் கருவியாகக் கொள்வதையும் விளக்க மாகக் கூறி, நமது நண்பர்களுக்கும் இனி இப்படிப்பட்ட இடைஞ்சல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளத்தான் வேண் டும். நாம் இதற்கெல்லாம் ஒரு தனி மாநாடு கூட்டிவிட வேண்டியதுதான். இனிப் பொறுக்கமுடியாது.நான் வரவேற் புக் கழகத்துக்குத் தலைமை தாங்கிவிடுகிறேன் - திறப்பு விழா நீ நடத்திவிடு - தலைமைக்கு யாரை அழைக்கலாம்" என்று தேவியார், ஆர்வத்துடன் கேட்டார்கள். யாரை அழைக்கலாம்?”-என்று கருப்பண்ணசாமி யும் யோசிக்கலானார்! 1951-ம ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் லால்குடிககுச சமீபத் தில் உள்ள புருசை சாங்குடி என்ற கிராமத்தில், இரு கட்சிகள் ஏற்பட்டு, கருப்பண்ணசாமியை மண்டபத்தில் போட்டு பூட்டிவிட, போலீஸ் உதவியுடன் பூட்டு உடைக்கப்பட்டு சாமி கோயிலில் கொண்டுபோய்ச் சேர்ககபபட்டார் என்ற செயதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், ஆகஸ்ட் 22ல வெளிவந்தது. அந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு தீட்டப்பட் டது இந்தக் கற்பனைக் கதை.