உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சூதாடி சரிதான். தப்பாகக் கணக்கும் போட்டே; ஷேக் மணிலா வேறு, இந்த இலட்சணத்துக்கு இருநூற்று இருவது கேட்டுட்டே ; போடா, போ. பணம் போகாமே, என்ன ஆகும். நீயும் ஒரு ஆட்டக்காரன்தானா?' "சும்மா இருடா! போன வாரம், அதைவிட மோச மான சீட்டு, தெரியுமா? துருப்பிலே, மணிலா கிடையாது- ஷேக் மணிலா ஒண்ணு, வேறே ஜாதியிலே ஆனா ஜெயித்து விட்டேன்; தெரியுமா? துருப்பைத் தட்டினேண்டா, ட்டான்னு கீழே மணிலா விழுந்தது. என் 'ஜோடி' ஆளிடம் மணிலா ஷேக்; மறுபடியும் துருப்பிலே ஒரு தழையைக் கொடுத்தேன்..." ‘'ஏன்?’’ "துருப்பு ஆஸ் வெளியே இல்லவா இருக்கு? "அட பாதகா! துருப்பிலே, மணிலாவும் கிடையாது; ஆசும் இல்லை. ஆட்டம் கேட்டுட்டயே, என்ன தைரியண்டா உனக்கு." "கேட்டது மட்டுமா, ஜெயித்தேனடா ஆட்டத்தை- துருப்புத் தழையைத் தட்டினேனா, ஆஸ் போட்டுப் பிடித் தான்; அவன் ஜதை ஆள் இருக்கிறானே அவன் "தொப் பு'ன்னு ஜாக்கியைத் தூக்கிப் போட்டான், அதன் தலை யிலே. எந்த ஜாக்கி தெரியுமோ? நான் ஷேக் மணிலா வைத் திருக்கிறனே, அதே ஜாக்கி. அவ்வளவுதான்! அந்தப் பிடி யிலே, அவன் கண்டதோடே சரி. நம்ம ஷேக் மணிலா பிழைச் சுது; ஆட்டமும் ஜெயித்தது. அப்படி சில வேளையிலே, எவ்வளவு மோசமான சீட்டா இருந்தாலும் ஜெயித்துவிடுது; சில நேரத்திலே கல்லாட்டம் சீட்டு இருந்தும் தோத்துப் போகுது. " "ஆமாம்! சரி. போடுவமே நாலு ஆட்டம்." "இரண்டே பேரா?" "ஆமா, இரண்டு பேர்லே முன்னூத்தி நாலு, ரொம்ப ஜோரா இருக்கும்டா.' "மேஸ் என்னா?