உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூதாடி 149 " 'அரையணா, ஓரணா." செ! வேண்டாம்டா. காலணா அரையணா போதும்! "சரி, போடு. அவங்க வருவதற்குள்ளே நாலு ஆட்டம் போடலாம்." இது, பங்களா வாசற்படியை அடுத்த மோட்டார் ஷெட்டில்! பங்களா சொந்தக்காரர் பார்த்தசாரதி முதலியா ரின் மோட்டார் டிரைவர். பாலுவுக்கும், முதலியாரைப் பார்க்க வந்து முத்துசாமி ஐயரின் மோட்டார் டிரைவர், மோசசுக்கும் நடந்த பேச்சு. ஐயர் முதலியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உள்ளே. மோட்டார் ஷெட்டிலே 304 ஆரம்பமாகிவிட்டது. மளமளவென்று மோசசுக்கு இரண்டே காலணா போய்விட்டது. பணமாகப் போன இரண்டே கால ணாவுடன், தோல்வியால் வந்த கோபத்தை மாற்றிக் கொள் வதற்கு, இரண்டு கத்தரிக்கோல் தீர்ந்துவிட்டது; அது வேறு நஷ்டம்; பணம் அப்படியும் கொஞ்சம் புகைந்து போயிற்று. பாலுவுக்குப் பரம சந்தோஷம். மோசசுக்குக் கவலை. இரு வருக்கும், ஐயரின் குரல் கேட்கவில்லை. அவர் மோட்டார் ஆர்ன் செய்தபோதுதான மோசஸ் அவறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான். ஐயர் கோபமாக இருந்தார். அவசரமாக மோட்டாரண்டை சென்றான் மோசஸ். " 'கழுதே! என்னடா இது? நாள் கத்து கத்துன்னு கத் திண்டிருக்கேன். எங்கே போயிருந்தே' "ஷெட்டுக்கு...." “ஷெட்டிலே எனை வேலை உனக்கு." 'நம்ம கார் பாட்டரி தொல்லை கொடுக்குது பாருங்கோ, அதுக்காக..."

  • 304 ஆடினா, பாட்ரி சரியாப்பூடும்னானா அவன்

மோசஸ் தலையைச் சொரிந்தான்--ஐயருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, சீட்டாடிக் கொண்டிருந்த விஷயம். குறும் புப் பார்வையுடன் தோட்டக்காரப் பையன் நின்று கொண் டிருந்ததை மோசஸ் பார்த்தான். பயல், இவன்தான கலக மூட்டிவிட்டான் என்று தெரிந்தது. தெரிந்த பிறகு ஒரு