உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை நடிகை 157 விழாக் கூட்டம் தொடங்கியது. சம்பிரதாயப் பேச் சுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கின. கூட்டத்தினர் விளக்கெண்ணெய் குடிப்பதுபோல் முகத்தைச் சுளித்துக் கொண்டு அலுப்புடன் அமர்ந்து இருந்தனர். கடைசியில் தலைவர், "தோர்ஸ்தோயன் தோப் ரோவ்...பேசுவார். ...அவர்" என்று தட்டுத் தடுமாறிக் கூறினார். "என்னடா இது! தலைவர் தடுமாறுகிறார்? என்று பலரும் மேடையை உற்று நோக்கினர். இராணுவ உடையிலிருந்த ஒரு கர்னல், "நான வெகு நேரம் பேச வேண்டி இருக்கும் என்று அஞ்சுகிறேன். ஆனால் அதற்குள்ளே நான் இங்கு வந்திருக்கிறேன்! எனவே "தோழர்களே, அருள் கூர்ந்து எனது சொற்பொழிவை இறுதிவரை கேளுங்கள்...." அது. தெட்டமில்லாத நிதானமான குரலில் அவர் பேசி னார். "நான் நாஜிகளின் ஆக்ரமிப்பின்போது தலை மறை வாக இருந்த காலத்தில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதைப் பற்றிக் கூறவே இங்கு வந்துள்ளேன். 1943 வசந்த பருவத்தில் உங்கள் ஊரில் நடந்த சம்பவம் ஒருநாள் மாலையில் நான் ஓரிடத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும்போது இரகசிய போலீஸ் ஏஜண்ட் ஒருவன் என்னைப் பின்தொடர்வதை உணர்ந்தேன். எனவே திசைமாறி, வளைந்து வளைந்து செல்லத் தொடங்கினேன். ஆனால் என்னைப் பின்தொடர்ந்த ஆசாமி விடாக்கொண்ட னாக இருந்தான். அவனுடன் மற்றொரு ஆளும் 'மப்டி" யில் இருந்தான். ஊரின் எல்லையை அடைந்ததும் தான் காட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன். அப்படியாரவது அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தவர் கள், "நில் ஓடாதே"என்று கூவியது என் காதில் வந்து விழுந் தது. என் தலைக்குமேல் அவர்கள் சுட்டனர். என்னை உயிரு டன் பிடிக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம் என்று தெரிந்து விட்டது.