உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 துணை ஆயினும் நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஆனால் இதற்குள் என்னைத் துரத்தி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அப்போது அங்கு ஓர் ஒதுக்குப் புறத் தில் தன்னந்தனியாக ஒரு சிறியவீடு இருந்ததைக் கண்டேன். உடனே அவ்வீட்டின் தோட்டத்துப் பக்கம் சென்று வீட்டி னுள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன். அப்போது நான் அங்கே கண்ட காட்சி என் இரத்தத்தை உறையச் செய்தது. அங்கே ஓர் இளம் பெண் வெண்ணிறச் சால்வையைப் போர்த்திக் கொண்டு கையில் ஓர் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தாள்!அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியால் கூச்சலிட்டாள். அதற்குள் என்னைத் துரத்தி வந்தவர்கள் அந்த இடத்தை அடைந்து விட்டனர். உடனே அந்தப் பெண் தனது வாயில் கையை வைத்துப் பொத்திக் கொண்டாள். இதை நான் கண்ணால் கண்டேன். நான் உடனே என் ரிவால்வரை எடுத்துத் தயாராக கையில் வைத்துக் கொண்டேன். எனது உடலில் கடைசி இரத்தம் உள்ளவரை போராடுவது என்று நான் முடிவு செய்து கொண்டேன். அப்போது அந்த இரகசிய போலீஸ் ஏஜெண்டுகள் வீட்டின் பின்பக்க, "கேட்டைத் திறந்து கொண்டு, அங் கிருந்த பூச்செடிகளை மிதித்துக் கொண்டு வந்தனர். உடனே நான் மறைந்திருந்த வீட்டைச் சேர்ந்த இளம் பெண் வெளியே ஓடிவந்து, பெருங் கூச்சல் போட்டாள். "ஏ! முரடர்களே, உங்களுக்கு அறிவில்லையா? மலர்ச் செடிகளை இப்படியா பாழாக்குவது? எனதருமை மலர் களே, உங்களை அழித்த பாவிகள் ஆயிரம் முறை மடிந்து சாகட்டும்! போலீசுக்காரர்கள் அப்பெண்ணின் புலம்பலைக் கேட் டுத் தயங்கி நின்றனர். "அம்மா, பயப்படாதீர்கள்! ஒரே ஒரு கேள்விக்கு மட் டும் பதில் கூறிவிடுங்கள்; போதும். இங்கு சற்று முன்பு ஒரு ஆள் ஓடிவந்தானா?-போலீசு ஏஜண்டுகளில் ஒருவன் கேட்டான்.