உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூபதியின் ஒருநாள் அலுவல் " 19 கோபம். கேட்டுக் கொண்டார். பூபதிக்குக் கொஞ்சம் 'இவனே அலையட்டும்! சர்க்கார் இவனை யுத்தப் பிரசாரகர் என்று நியமித்தி நக்கிறார்கள்; மாதம் 500 சம்பளமும் தருகிறார்கள்; இவன் அலைய வேண்டியது சரி; என்னை எப்படி இவன் அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கலாம்" என்று கருதியே கோபித்துக் கொண்டு, தனது அந்தஸ்தைச் சுட்டிக்காட்டினார் துரைசிங்கத்திடம். "ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான்! குடித்துவிட்டுக் கூத்தாடத்தான் செய்வான். ஏதாவது ‘வித்து விசனம்' கவலை- கஷ்டம் இருந்தால்தானே! காளைமாடு போலச் சுற்றி வருகிறான். இருப்பது பாழாகாதபடி பார்த்துக்கொள் ளவும், இவனுக்குச் சொத்து சுகம் தேடிக் கொடுக்கவும் நான் பாடுபட்டேன். அவன், அந்தத் தைரியத்திலே, உல கத்தைப் பற்றியே கவலை இல்லை என்று மதோனமத்தனா கத் திரிகிறான். எந்த விலை ஏறினால் அவனுக்கென்ன! அவன் உண்டு, நண்பர்கள் உண்டு, செலவு செய்வதற்குக் கேட்கும்போது பணம் தர நான் உண்டு என்று இருக்கி றான். விளைந்து வருகிறது, விற்றுப் பணத்தைக் குவிக்கி றான், செலவு செய்து கொண்டு குஷாலாக இருப்போம் என்று உலவுகிறான். பாடுபட்டுப் பணத்தைச் சேர்க்கிற எனக்கல்லவா தெரியும், அதனுடைய அருமை." பூபதி, புவனேஸ்வரியின் நடனக் கச்சேரியை ஏற்பாடு செய்யப் போயிருக்கிறார்; கல்யாணி என்ற பாடகியை அழைத்துவரப் போயிருக்கிறார் என்ற செய்திகளை அடிக் கடி கேட்டுக் கோபங் கொண்டார், பெரிய மிராசுதாரர், பொன்னுராமர். தன் மகன், சர்க்கார் காரியமாகப் போயி ருக்கிறான், சண்டைக்குப் பணம் திரட்டும் காரியமாகத் தான் போயிருக்கிறான், யுத்த நிதி உதவிக் கச்சேரிகளுக் காகத்தான் புவனேஸ்வரி, கல்யாணி ஆகியோரைத் தேடிச் சென்றானேயொழிய வேறு சொந்த வேடிக்கைக்கு அல்ல என்று, பொன்னுராமரிடம் கூறப்பட்டது என்றபோதிலும், அவர் சமாதானம் அடையவில்லை. யுத்த வேலை, நிதி திரட்டுவது என்று என்ன பேர் வேண்டுமானாலும் வைக்கட்