உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பூபதியின் டும், பூபதி இப்போது சதா சர்வகாலம், இந்தச் 'சிரிப்புக் காட்டிகள்' இருக்கும் இடத்திலே உலாவுகிறான். அது தவறு; அது கூடாது என்று கூறியபடி இருந்தார். அவருக்குத் தன் பாலிய கால நினைவு. அவர் காலத்திலே யுத்தநிதி வசூலிக்கும் வேலை இல்லை; ஆனால் 'நவராத்திரி உற்சவ ஏற்பாடு' இருந்தது. பொன்னுராமர் அதிலே தீவிரமாகச் சேவை செய்தபோதுதான் திலகாவும், அன்னமும் அவருக் குச் சினேகிதமானது. "இலேசாக படுக்கப் போகும்போது கொஞ்சம் உசத்திச் சரக்கு' சாப்பிடக் கற்றுக் கொண்டதும் அந்தச் சமயத்திலைதான். ஆகவே பொன்னுராமர், யுத்த நிதி வசூல் வேலைக்குத்தான் போயிருக்கிறான் ஒயிலானத் தன் என்று சொன்னவர்கள் மீது சீறி விழுந்தார். தனக்கு நவராத்திரி"-தன் மகனுக்கு 'யுத்தநிதி வசூல் வேலை' என்று மாறி இருக்கிறது என்று எண்ணினார். "ராஜா போல நிம்மதியாக இருக்க வேண்டியவன்! வீடு இருக்கிறது, அரண்மனைபோல; தோட்டம் இருக்கிறது, நந்தவனம் போல; என்ன குறை இவனுக்கு? எந்த வேலைக் குத்தான் இவனுக்கு இங்கே ஆள் இல்லை. நிம்மதியாக இருக்கக்கூடாதா? பகவான், நமக்கு ஒரு குறையும் செய்ய வில்லை; சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறார். இதை அனு பவித்துக்கொண்டு, வீட்டோடு சந்தோஷமாக ஏன் இருக்கக் கூடாது? என்னமோ, பாடுபட்டு ஜீவிக்க வேண்டியவனைப் போல, சதா அலைச்சல்! வீடு தங்குவது கிடையாது; வேளா வேளைக்குச் சாப்பிடுவது கிடையாது; உடம்பைக் கவனித் துக் கொள்வது கிடையாது; கண்டவர்களிடம் பேசிப்பேசி, தொண்டையைக்கூடப் புண்ணாக்கிக் கொள்வான் போலி ருக்கிறது. ஏனம்மா இவனுக்கு இந்தக் கஷ்டம்? இவன் தலை யிலே நல்ல எழுத்து எழுதியிருக்க, எதற்காக இ பன் அலைந்து கொண்டிருக்க வேண்டும்? வீட்டோடு நிமமதியாக இருக் கக்கூடாதா" என்று, பூபதியின் தாயார் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். எப்போது பார்த்தாலும் பூபதி வெளியே சுற்றிக் கொண்டே இருப்பதைக் கண்டு தாய்க்கு, மகன் இப்படி அலைந்து உடம்பை பாழாக்கிக் கொள்கிறானே