உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பூபதியின் ஒருநாள் அலுவல் கொள்ளை அடிக்கவும், தடுத்தவர்களைத் தாக்கவும், கைது செய்யவந்த போலீசாரைப் பார்த்து, 'நீங்களும் ஏழைகள் தானே என்று சொந்தம் கொண்டாடவும் தொடங்கிற்று. சீமான்கள் அவறி ஓடினர். 'சக்திக்கேற்ற உழைப்பு! தேவைக் கேற்ற வசதி' என்ற முழக்கம் எங்கும் கேட்டது... என்று ரேடியோவில், யாரோ, பிரெஞ்சுப் புரட்சியையோ, ரஷி யப் புரட்சியையோ பற்றி விளக்கிப் பேசிக்கொண்டிருக்கவே, விஸ்கி பாட்டிலை ரேடியோமீது அடித்துவிட்டு பூபதி பெருங் கூச்சலிட்டான். ஓடோடி வந்த தாயார், ‘"என்னப்பா பூபதி!" என்று கதறினார்கள். "கெட்ட சகவாசம் வேண் டாமென்றால் கேட்கிறானா?" என்றார் தகப்பனார். டெலி போன் மூலம் சேதி கேட்டு விரைந்து வந்த டாக்டர் தினகர், "ஒன்றும் இல்லை. ரொம்பக் களைத்திருக்கிறார்; ஒருமாதம் ஊட்டிபோய் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மருந்து இருக்குமிடத்தைக் கூறிவிட்டுப் போனார். பங்களாத் தோட்டக்காரச் சிறுவன், "வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்! அங்கே..." டாக்டர் என்று பாட்டை பாடினான். விஸ்கியுடன், கொடுத்த மருத்தும் சேர்ந்து, பூபதிக்கு மயக்கத்தைத் தந் தது. பாட்டு காதிலே பட்டதும் படாததுமாக இருக்கை யிலேயே, படுக்கையில் சாய்ந்துவிட்டான்.