உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வழக்கு மா: வழக்கின் விவரத்தை வக்கீல் கூறினாரே, கேட்டா யல்லவா? குற்: கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். {வாதி வக்கீல் எழுந்து நின்று, தான் கேள்விகள் போடுவதாகக் குறிப்புக் காட்டிவிட்டு...) வாதி வக்கீல்: இது கோர்ட் - நீதிமன்றம். குற்: நீதி கிடைக்குமென்று நம்பித்தான் நிற்கிறேன். வா.வ: வம்பளப்பு வேண்டாம். மண்டி மாணிக்கஞ் செட்டியார் கடையில் நீ குமாஸ்தாதானே? குற்: இருந்தேன். வா.வ: கடந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது? குற்: தங்கள் வீட்டிலே பாட்டுக் கச்சேரி நடந்ததாகக் கேள்வி. வா.வ: குறும்பு பேசாதே. என் வீட்டு நடவடிக்கை பற்றி உன்னை யாரும் கேட்கவில்லை; செட்டியார் கடை யிலே என்ன நடந்தது? குற்: அதைக் கேட்கிறீர்களா? முன்னமேயே அப்படிக் கேட்டிருந்தால் நான் ஏன் தங்கள் வீட்டு விஷயம் பேசப் போகிறேன். வா.வ: சரி, சரி! கடந்த வெள்ளிக்கிழமை செட்டியார் கடையிலே என்ன நடந்தது? குற்: வியாபாரம். வா.வ: நான்சென்ஸ்!இது கோர்ட்; இங்கே கோமாளி களுக்கு இடம் கிடையாது. குற்: நீதிபதி அவர்களே! வக்கீலய்யா கேட்கும் கேள்விக் குத்தானே நான் பதில் சொன்னேன். அவர் பிரமாதமாகக் கோபம் செய்து மா: (வக்கீலைப் பார்த்து). கம் டு த பாயிண்ட்.