உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 35 வா.வ: எஸ் யுவர் ஆனர். சிவநேசன்! சென்ற வெள்ளிக் கிழமை நீ செட்டியார் கடையிலிருந்து பத்து வீசை கற் பூரத்தைக் களவாடினாயா? பத்து குற்: களவாடவில்லை. செட்டியார் அந்தப் வீசை கற்பூரத்தைக் கொடுத்து, எடுத்துக் கொண்டுபோய், மண்டி மாதவ முதலியாரிடம் கொடுத்துவிட்டு, பதிலுக்குக் கொள்ளு வாங்கிக் கொண்டுவரச் சொன்னார். வா.வ: விவரத்தைக் கூறுவதிலே நாணயமாகத்தான் இருக்கிறது. செட்டியார் சொன்னபடி கொடுத்தாயா? குற்: இல்லை. (வா.வ. உட்கார்ந்து கொள்கிறார்] மா: உனக்கு வக்கீல் உண்டா? குற்: இல்லை. மா: என்ன சொல்கிறாய் இப்போது? பத்து வீசை கற்பூரத்தை நீ, செட்டியார் சொன்ன இடத்தில் கொடுக்காத தால், அதை நீ களவாடிக் கொண்டாய் என்றுதானே அர்த்தம்? குற்: தங்களைப் போன்ற பெரியவர்கள் தப்பர்த்தப் பட்டால் நான் என்ன செய்வது? மா: வேஷம் போடாதே. கற்பூரத்தைக் கடையிலிருந்து எடுத்துச் சென்றது உண்மைதானே? குற்: ஆமாம். மா: கொடுக்க வேண்டிய இடத்திலே கொடுக்க வில்லை. அதுவும் உண்மைதானே? குற்: ஆமாம். மா: வேறு என்ன ருஜு வேண்டும், உன்னைத் தண் டிக்க? சரி, என்ன சமாதானம் சொல்கிறாய்? | குற்: இரண்டொரு சாட்சிகள் உள்ளனர்; விசாரிக்க வேண்டுகிறேன்.