உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய் ஓடிப் போச்சு 49 'ஆமாம்!அந்தப் பய, பேயாவது பூதமாவது -அதெல் லாம் தப்புன்னு சொன்னான். மாமரத்துப் பிசாசு இலேசுப் பட்டதா?' ஆமா! அந்தப் பய, தூக்குப் போட்டுகிட்டவன்; உசிரோட இருக்கச்சயே ரொம்பப் பொல்லாத பயலாச்சே! பிசாசு ஆனா கேட்கோணுமா சேஷ்டையை! சரி, சுகமாயி டுத்தேல்லோ, போவுது. சொக்கியம்மாவுக்கு அடுத்த வெள் ளிக்கு ஒரு சேவலை அறுத்துப் படையலைப்போட்டுப்போடு. நான் வர்ரேன். அது சரி! உம் மகளுக்குத்தான் இப்ப, பேய் இல்லையே! இனிக் கண்ணால விஷயத்தை முடிச்சிட வேணு மோல்வோ? .. 'ஆமாண்ணெ! முடிச்சிடத்தான் வேணும். என் மவன் அதுக்காகத்தானே, இங்கே தங்கி இருக்கான்." "இடம் எங்கே பார்த்தே? "நம்ம வேலந்தான்.' "மறந்து போனேன். போன வருஷமே, அவனைத் தானே உன் மவளுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தே. 'ஆமாமாம்.பய, கண்ணெ காட்டிப் பல்லைக் காட்டி என் மவளுக்கு ஆசை ஊட்டிட்டான்." "பரவாயில்லெ. பையன் நல்லவன்.' "ஆமாம்' நம்ம கொல்வைக்கு அடுத்த கொல்லையை அவன் குத்தகைக்கு எடுக்கறப்பவே எனக்குச் சந்தேகம்- பையன் பக்கத்திலே வர்ரது பயிர் பண்ண இல்லென்னு.... " " 'குத்தவ பணங்கூட அதிகமால்லா கொடுத்தானாம்.' 'ஆமாண்ணெ! இந்த வருஷத்தோடே, தீந்ததன்னு வையி. குத்தவைதான் எடுத்தானே! மடப்பய மவன். ஒரு கத்திரி, முள்ளங்கி ஏதாச்சும் போட்டா நாலு காசு வருமா? அதே உட்டுப் போட்டு, ரோஜா வெச்சிட்டான். 'சரித்தான். செல்லாயிக்குத்தான் பூன்னா உசிரு.'