உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பேய் "இந்தக்காலத்துப் பசங்கசாமர்த்தியத்தப்பாரண்ணெ! போவுது, பசங்க சந்தோஷமா இருக்கட்டும். நான் பயந்து போயிருந்தேன். பேய் பிடிச்சுட்டுதே, அது கதி என்னாவுதோ ஏதாவதோன்னு.' "ஒனக்கு ஒரு கொறையும் வராது. போய்வாப்பா." ஓரூர் கிராமத்திலே, உழவன் செங்கோடனுக்கும், ஊர்ப் பெரியவர் கரியானுக்கும் நடந்தது இந்த உரையாடல். செங்கோடன், தன் மகள் செல்லாயிக்கு, பேயால் என்ன நேருமோ என்று பயந்து, பதைத்து,செய்யாத பூஜை இல்லை. கடைசியில் பூஜாரி பொன்னனின் தயவால்தான் அவள் பிழைத்தாள். ஊர்ப் பெரியவர், கரியப்பாவிடம், இந்தச் சந்தோஷச் செய்தியைக் கூறிவிட்டு, செங்கோடன், வேறு யார் அகப்படுவார்கள் பேச என்று புறப்பட்டான். அன்று காலையிலிருந்து, இந்தச் சேதியைப் பலரிடம் கூறிக் கொண் டிருப்பதே வேலையாக இருந்தது செங்கோடனுக்கு. ஓரூர் (அதுவே அந்தக் கிராமத்தின் பெயர்) வாசிகளிலே முக்கால்வாசிப் பேரிடம் கூறியாகிவிட்டது. ஏற்றம் இறைத் துக் கொண்டிருக்கும் எல்லனைத் தேடிக் கொண்டு போகி றான் செங்கோடன். பேய் பிடித்துக் கொண்ட பெண்ணை, எவன் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று பயந்தான், பதைத்தான். உயிருக்கே ஆபத்து நேரிட்டு விடுமோ என்றும் பயம். ஒரே பெண், ஒரே பிள்ளை. பிள்ளை "இரண்டெழுத்து' படித்தவன். அதனாலே பட்டணத்திலே வேலை. அதிலேயும், பத்திரிகாலயத்திலே! பார்சல் கட்டுகிற வேலைதான். என்றாலும் பத்திரிகை ஆபீஸ் வேலை என்று தான் செங்கோடன், பெருமையாகப் பேசிக் கொள்வான். அதிலே தவறுமில்லை. இரண்டு தலைமுறையாக ஏர் தவிர வேறு தெரியாத குடும்பத்திலே பிறந்த சுப்பு, வெள்ளைச் சொக்காயும், காக்கி நிஜாரும் போட்டுக் கொண்டு, ஆபீசில் வேலைக்குப் போனால், பெருமை இல்லாமலிருக்குமா! லீவ் கிடைத்து வருகிறபோது, சுப்பு, கிராமத்திலே யாரிடம் பேசும்போதும், தனி மனிதனாகவே தென்பட்டான். விவ சாயத்தைப் பற்றியா பேசுவான்? தெரியாதே பேச! உலக