உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பேய் அந்த அரிய பொக்கிஷம் போன்ற புத்தகத்திலேகூட இரண்டோர் ஏடுகளைக் கிழித்துவிட்டாள் செல்லாயி அவளா செய்தாள் பாவம்! எல்லாம் அந்தப் பேய் செய்த வேலை என்று செங்கோடன் தன் மகனுக்குக் கூறினான். புத்தகம் கிழிந்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை சுப்பு. தன் தங்கையின் தேக நிலை பற்றித்தான் கவலைப்பட் டான். முன் தடவை வந்தபோது செல்லாயி, ஒரு குறையு மின்றித்தான் இருந்தாள். சொல்லப் போனால் ரொம்பச் சந்தோஷமாகவே இருந்தாள். பான். "எங்கேம். போயிருந்தே?—செங்கோடன் கேட் "கொல்லைப் பக்கம்-செல்லாயி சொல்வாள். "ஏனாம்?' "சேங்கண்ணு அந்தப் பக்கமா போயிருக்கும்...' -குறும்புக்காரக் குப்பன் சொல்லுவான் அதுபோல. அது, வசந்த காலம் - மனப்பருவத்தில் - அதாவது, வேலனுக்கும் செல்லாயிக்கும்..ஆசை பொறந்த சமயம். காதல் என்று பெயர் கூறத் தெரியாதல்லவா. கிராமத்தார் கள்தானே! வேலன், குடிகாரக் கோவிந்தன் மகன். இந்தப் பய லுக்கு அவங்க அப்பன் சுபாவம் கிடையாது. கள்ளுத் தண் னியைக் காத தூரத்திலே கண்டாலே, வாந்தி எடுப்பான் என்று வேலனைப் பற்றிப் பேசுவார்கள் ஊரார். மகன், மீசை கருக்கும் பருவம் வந்ததற்கும், கோவிந்தனுக்கு முடக்கு நோய் வந்ததற்கும், காலம் ஒத்து இருந்தது. ஆகவே, வேலன், விவசாய காரியத்தைக் கவனித்துக்கொண்டு, ஊருக்கு நல்லவனாக இருந்து வந்தான். "ரொம்பப் பொல்லாதும்மா, வேலு" என்று, அந்த ஊரிலேயே செல்லாயி ஒருவள்தான் சொன்னவள்.