உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிப் போச்சு 53 பொல்லாதவனேதான் அவன். போகிறபோதும் வரு கிறபோதும், ஏன், செல்லாயியை அப்படிப் பார்க்க வேண்டும், விழுங்கி விடுவதுபோல? ஆனால், செல்லாயியை மட்டுந்தான்! கண், மேயும் சுபாவம் கொண்டதல்ல. "ஏம்பா! வேலு" என்று சிலர் தமாஷ் செய்வார்கள். .. 'ஒண்ணுமில்லேண்ணே!" மிகப் பணிவாக, புன்சிரிப் புடன் கூறுவானன. ஆசைக்கினியவளே அல்லி ராணி! அழகான மாதரசி அல்லி ராணி! அருகினிலே வரலாமோ அல்லி ராணி! என்று அவன் பாடினபோதுதான் புரிந்துவிட்டது, உண்மை. செல்லாயிக்கே தனக்கும், வேலன்மீது பிரியம் என்ற அர்ஜுனன். வேறே கிராமக்கூத்து - வேலன்தான் யாரப்பா ராஜா வேஷத்துக்கு ஆள் இருக்கிறாங்க- என்று கூத்து வாததியார் குமரேசன் சொன்னபோது, வேலனுக்குப் பூரிப்புதான். அர்ஜுனன் பாடுவதற்கு அவர் சொல்லித் தந்த பாட்டை, அன்று அவன் அவ்வளவு உருக்கமாகப் டாடினான். அல்லி வேஷம் போட்டவன் பக்கத்திலேயேதான் நிற்கிறான். வேலனோ, அவனைப் பார்த்துப் பாடவில்லை -நேரே செல்லாயி இருக்கும் திக்கு நோக்கியே பாடினான். பிரபல நடிகன்கூட, அன்று வேலன் பாடியதுபோல் பாடி யிருக்க முடியாது. செல்லாயிக்குச் சமர்ப்பித்த பாடலல்லவா அது! " சூது தெரிஞ்சுப் போச்சு, உன் சூது; மாது, நான் அறிவேனே உன் சூது!" என்று அல்லி வேஷக்காரன் பாடினான் -- செல்லாயிக் குப் பாடல் தெரியும்- எப்படிப் பாட முடியும்:- வெட்கமாக இருக்குமே!