உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பேய் இந்தச் சமயத்திலே செல்லாயியைக் கண்டு, சுப்பன் பெருமைப்பட்டான். காட்டு மல்லிகை என் தங்கை நாட்டுப்புறத்திலே இருக்கிறாள்- காசம் பிடித்ததும், கண் மங்கினதுகளும் பட்டணத்திலே 'டால்' அடிக்கின்றன என்று எண்ணிப் பெருமைப்படுவான். இலேசாக வேலன் விஷயம் தெரிந்தது. "செல்லா! நம்ம கொல்லைக் கோடியிலே இருக்கே ஒரு மரம், அது என்னா மரம்?" சுப்பு கேட்டான் ஓர் நாள். "அதுவாண்ணே, எனக்குத் தெரியாதே'-செல்லா வழக்கத்துக்கு மாறாகப் புளுகு பேசினாள். புரியாதவன் போலச் சுப்பு நடித்தான். "என்னம்மா, தினம் போகிறே வருகிறே, மரம் இன்னதுன்னு கூடவா தெரியாது" என்று கேட்டான். "பிசினி மரம் அண்ணே" என்று பதில் கூறி விட்டு உள்ளே ஓடிவிட்டாள். செங்கோடன் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டே, "பாருடாப்பா, சாமர்த்தியத்தை. பிசினி மரமாம். தாலி கழுத்திலே ஏறுவதற்கு முன்னேயே, பேரைச் சொல்லக்கூடா தாம்! பிசினி மரம்! வேல மரம்னு சொன்னா, அவன் பேரு வருதுன்னு, என்னா யோசனை பாருடாப்பா! என்று கூறி னான். போதையில்லாத நேரமாகப் பார்த்து, கோவிந்தனிடம் பேசினான் செங்கோடன். “தைமாசம் முடிச்சிடுவோம்" என்று கோவிந்தன் கூறிவிட்டான். வேலன், கவர்ச்சியான தோற்றமுடையவனாகவும், உயர்ந்த குணமுள்ளவனாகவும், நல்ல உழைப்பாளியாகவும் இருப்பதையும், அவனிடம் செல் லாயி உள்ளன்பு கொண்டிருப்பதையும் கண்டு, சுப்பு, இது பொருத்தமான காதல் கலியாணம் என்றுகூறி மகிழ்ந்தான். போட்டோ எடுத்துப் போடலாம் பத்திரிகையிலே! எத் தனையோ தேய்ந்து போன திருமதிகளின் திருமண பிளாக்கு. கள் வெளிவருகின்றன! ஆனால் ஒரூர் உழவன் மகளின், உயர்ந்த அழகும், வேலனின வீரத் தோற்றமும், பத்திரிகைக் காரருக்கு எப்படிப் பிடிக்கும்? பட்டிக்காட்டானுக படந்