உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிப் போச்சு 55 தானே அது! மிராசு வீடா, இல்லெ ஒரு டாக்டரா, படம் போட? ஆகவே சுப்பு அந்த ஆசையை அடக்கிக்கொண்டான். அவன் மனதில் தன் தங்கையும் வேலனும் சந்தோஷமாக இருக்கும் காட்சி, அப்படியே பதிந்து இருந்தது-போட் டோவைவிடத் தெளிவாக. இந்த நிலையிலே, 'செல்லாயிக்கு உடம்பு சரியில்லை; பிசாசு பிடிச்சுக்கிட்டு இருக்கு. பயப்பட வேணாம். தக்கது செய்து வர்றோம்" என்று கடிதம் வந்தால், சுப்பு திடுக் கிட்டுத்தேம்பி அழாமல் எப்படி இருக்க முடியும்? லீவ்இல்லை. எனவே, விவரமாகக் கடிதம் எழுதினான் தகப்பனாருக்கு. "பேயும் கிடையாது; பூதமும் கிடையாது. நோய்தான் அது. நல்ல மருந்து கொடுக்க வேணும் - வீணா மந்திரம்ணும், மாயம்ணும் செய்து, செல்லா உடம்பைப் பாழ்படுத்திவிடா தீங்க. நான் ஒரு பத்து நாள்லே வர்றேன்." என்று. கொஞ்ச நாள், மகன் சொன்னபடித்தான் செங்கோடன் மந்திரக்கார னைக் கூப்பிடவே இல்லை. ஆனால், செல்லாயிக்கோ, உடம்பு இளைத்தது, ஒரே மயக்கம், தலைவிரி கோலமாகிக் கிடந் தாள் - கிணற்றிலே குட்டையிலேகூட விழுந்து விடுவேன்னு சொல்கிற அளவுக்குப் பேய் முற்றிவிட்டது. "செல்லா! உடம்பு என்னம்மா செய்யுது?'அம்மா கேட்பாள் அன்புடன். கண்களிலே மிரட்சியுடன் செல்லாயி மௌனமாக இருப்பாள். தாய் மேலும் மேலும் கேட்டால், செல்லாயியின் கண்களிலே நீர் பொலபொலவென்று உதிரும். சாப்பாடு சரியாகக் கிடையாது. அழுக்குப் புடவை தான் -- துவைப்பது கிடையாது-சமையல் செய்கிற இடத் தருகேயோ, புறக்கடை நடைப்பக்கமோ படுத்தபடி இருப் பாள். "எழுந்திரம்மா செல்லம்" உஹும்-ஏம்மா! மயக்கமா இருக்கு - இதேதான் பேச்சு. "மாமரத்துப் பிசாசு! வேறே ஒண்ணுமில்லே! இது நல்லாத் தெரியுது; நீ என்னப்பா செங்கோடா, நம்ம பூசாரி பொன்னனைக் கூப் பிட்டனுப்பி,மந்திரம் செய்யச் சொல்லு. ஏன் முழிக்கிறே" பலர் கூறினர் இதுபோல்.