உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பேய் "என் மவன் சொல்றான், அதெல்லாம் வேணாம்னு செங்கோடன் கூறுவான் அதற்குப்பதில்-குடிவெறியிலே, கோவிந்தனும் ஒருநாள் கூச்சலிட்டான். "மாமரத்துப் பிசாசு புடிச்சவளே, என்மவன் தலையிலே கட்டலாம்னு நினைச்சயடா.. டேய்..." என்று. செங்கோடன் கண் எதிரேயும், கருத்திலும், செல்லாயி தான்-வேலன்- கோவிந்தன்-திருமணப் பந்தல்--இவை எதுவும் தெரிவது கிடையாது. குடிகாரப்பய, ஏதோ கூவி கிட்டுக் கிடக்கட்டும்' என்று கூறிவிட்டான். எதற்கும் வேல னையாவது பட்டணத்துக்கு அனுப்பலாமாசுப்புவைப்பார்க்க என்று எண்ணினான். வேலன், "அப்பாவுக்கு உடம்பு ஒரு வேளைப் போல இல்லெ- நான் எப்படிப் போன முடியும்?" என்று நிர்த்தாட்சணியமாகக் கூறிவிட்டான்'. "இவனைப் போய்த் தங்கமான பயல்னு நினைச்சிக் கிட்டு இருந்தேன். தறுதலைப்பய மவன், தாலிக்கயத்தைத் தூக்கிகிட்டுத் திரிஞ்சான்; இப்ப என்னடான்னா தவப்ப னுக்கு உடமபு சரியில்லைன்னு சொல்றான். கொடம் கொட மாக் குடிச்சுப் போட்டுக் கிடக்கிறான் அப்பன்காரன். இவரு உருகுறாரு. அந்த நாய்க சம்பந்தமே நமக்குக் கூடாது போ' என்று செங்கோடன் சலித்துக் கொண்டான். அவ "போவுது, மெதுவாப் பேசுங்க. அது வேறே காதிலே விழப்போவுது' என்று செங்கோடன் மனைவி, சிவப்பி கூறினாள். கொஞ்சநாள் கழித்துத்தான் சுப்பு வந்தான் - நிலை மையைக் கண்டான்--அவனுக்குத் துக்கம் தாங்க முடிய வில்லை. அவன் கேள்விகளுக்கும், "ஒண்ணுமில்லே- மயக்கம்" இரண்டே வார்த்தைதான் பதில். "ஏம்பா, வேலனை..." என்று ஆரம்பித்தான் சுப்பு. அவரு ரொம்பப் பெரியவருடாப்பா, அப்பனைவிட்டு அரை நொடி அப்படி இப்படி போகமாட்டாரு. எல்லாம் சுப்பு!மனுஷாளுங்க சுபாவம். இந்த மாதிரி நேரத்திலேதானே தெரியுது” என்று துவக்கி, வேலன் நடந்து கொண்ட போக்