உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிப் போச்சு. 57 கைக் கூறினான் செங்கோடன். சுப்புவுக்கும் கோபந்தான். மடையன்! முட்டாள்! காட்டுப்பூச்சி!' என்று முணுமுணுத் தான். "ஏம்மா! பொழுதுபோக்கா படப் புஸ்தகத்தைப் பாரேன் என்று சுப்பு தங்கைக்கு யோசனை கூறினான். செங்கோடன் புத்தகத்தைக் கொண்டுவந்து சுப்புவிடம் காட்டி "இதெக்கூடக் கிழிச்சி விடுதேப்பா. இதெல்லாமா நோய்? மாமரத்துப் பேயின் வேலைதாம்பா' என்றார். புத்தகத்தை வாங்கிப் புரட்டினான் சுப்பு. இரண்டோர் ஏடுகள் கிழிந்து கிடந்தன- மோட்டார்-ஒரு அலங்கார புருஷன் ஆகிய இரண்டு படங்கள் அவை. அலங்கார புருஷனின் படம் அலங்கோலமாகக் கிடந் தது. அவன் யார்? கொஞ்சம் ஆராய்ச்சி நடத்தினான். என்ன காரணத்தாலேயோ, செல்லாயி, அந்த ஆளிடமோ அல்லது அதேபோன்ற உருவமமைந்தவனிடமோ, கோபம் கொண் டிருக்கவேண்டும். ஏன்? பட்டிக்காட்டிலே, இப்படிப்பட்ட வன், ஏன் வரப்போகிறான்? வந்திருந்தாலும், செல்லாயிக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? யோசிக்க யோசிக்க அவ னுக்குக் குழப்பம் அதிகரித்ததேயன்றி, வளக்கம் ஏற்பட வில்லை. அவளோ, விறைக்கிறாள்- விம்முகிறாள்-விளக்கம தருவதாக இல்லை. வேலனோ, 'யார் கண்டாங்கோ' என்று சுருக்கமாகப் பேசிவிட்டான். சுப்புவோ இந்தச் சிக்கு அறுக் காமல் இருப்பதில்லை' என்று முடிவு செய்து கொண்டான். படப்புத்தகம், அவன் தயாரித்தது தானே-'உலகம்' ஏட்டிலிருந்து சுத்தரித்து எடுத்த படங்களைக் கொண்டு. எனவே மோட்டாரும். சுந்தரப் புருஷனும், அவன் கத்த ரித்த படங்கள்தான். யாரவன்? யோசித்தான நெடுநேரம்; புரியவில்லை. ஆபீசுக்குச்சென்றான். அங்கு கண்டுபிடித்தான் பழைய இதழ்களைப் புரட்டி-அவன் ஒரு சினிமா டைரக்டர்! சிங்-என்பது பெயர். கிராமக் காதல் என்ற உன்னதமான கதையை, டைரக் டர் படமாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இத ழில் இருந்தது. ஒரு சமயம், டைரக்டர் கிராமக் காட்சி