உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேய் யைப் படமெடுக்கப்போயிருந்தாரோ? அப்போது ஒருவேளை, செல்லாயி அவனைக் கண்டிருக்க முடியுமோ- என்னமோ! டைரக்டரைச் சந்தித்துக் கேட்டாலொழியச் சிக்கல் தீராது என்று ஏற்பட்டது. பார்சல் கட்டும் 'பயலை' பிரபல டைரக் டர் சந்திப்பது,எப்படி? எப்படியாவது சந்தித்தாக வேண் டுமே! பலவிதமான முயற்சிகள் எடுத்தபடி இருந்தான்.ஒரு நாள், டைரக்டரே, ஆபீசுக்கு வந்தார்- எடிட்டரைப் பார்க்க! "சார்! கிராமக் காதல், 'ரஷ்' போட்டுக் காட்டு கிறேன் வருகிறீரா?" என்று கேட்டார் டைரக்டர். உள்ளமோ ரஷ்யாவின் போக்கை ஆதரிக்கச் சொல் கிறது; பத்திரிகை முதலாளியோ அமெரிக்கக் கம்பெனிக்கு ஏஜண்டு. ஆகவே அவரோ, அணுகுண்டு, அன்பு மார்க்கத் தின் தூதுவனாக அமையும்படி அமெரிக்கா அபூர்வமாக வேலை செய்கிறது என்று பிரச்சாரம் செய்யச் சொல்கிறார். இந் நிலையிலே என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்தவ ருக்கு, படம் பார்க்க அழைப்புக் கிடைத்தது. எதிர்பாரா விருந்தாயிற்று. என்ன காரணத்தாலோ, சுப்புவையும் அழைத்துச் சென்றார் எடிடர் அங்கு சென்றபிறகுதான் சுப்பு உண்மையைத் தெரிந்து கொண்டான். எடிடர் மிக மிகப் பாராட்டிய ஓர் காட்சி, கப்புவைத் தூக்கி வாரிப்போட்டது. எருமை ஒன்று, வழக்கத்துக்கு மாறாக ஓடிவந்தது- அதன் பின்னே ஓடிவருகிறாள் ஒரு பெண்- வேறு யாரு மில்லை - செல்லாயிதான்! செல்லாயியின் கழுத்திலே ஒரு ரோஜா மாலை!! கொஞ்சம் தொலைவிலே ஓர் ஆலமரம். அதன் அடி. யிலே, வேலன், அண்ணாந்து பார்த்தபடி படுத்துக் கொண் டிருக்கிறான்-நாகரிக உடை அணிந்த ஒரு மாது, ஒரு