உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிப் போச்சு 59 திராட்சைப் பழக்கொத்தை அவனுடைய வாய்க்கு நேரா கப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்! இந்த இரு காட்சிகள் போதாதென்று, சுப்புவே பதைக் கும்படியான வேறோர் காட்சியும் காட்டப்பட்டது. செல்லாயி, ஒரு ஆப்பிளைக் கடித்துக் கொஞ்சம் தின் கிறாள். அதன் இனிப்பிலே இலயிக்கிறாள் போலும்! அத னாலேதான், முகம் அவ்வளவு 'களை'யாக இருக்கிறது என்று, அவன் முதலில் எண்ணிக் கொண்டான். ஆனால் காட்சியின் அடுத்த கட்டம் அவனைத் தூக்கி வாரிப்போட் டது. கடித்த ஆப்பிளை செல்லாயி, ஒரு ஆடவனிடம், (நாக ரிக உடைக்காரன்) தருகிறாள். அவன் சந்தோஷமாக அதை வாங்கிக் கடித்துத் தின்கிறான்.- மீண்டும் அவளிடம் தரு கிறான்.--மீண்டும் அவள், ஆப்பிளில் கொஞ்சம் கடித்துத் தின்கிறாள் - மீண்டும் அவனிடம் தருகிறாள்- மறுபடியும் அவன் அதைத் தின்கிறான். சுப்புவுக்கு வந்த கோபம் இவ் வளவு அவ்வளவு இல்லை. காட்சி மாறிற்று - வேலனும்-செல்லாயியும், ஆத்தி ரத்துடன் சண்டை போடுகிறார்கள்— செல்லாயியின் தலை மயிரைப் பிடித்திழுத்து வேலன் துன்புறுத்துகிறான். செல் லாயி, அவனுடைய கையைக் கடித்து விடுகிறாள். அவன், செல்லாயியை, ஒரு மரத்தின்மீது மோதும்படி தள்ளுகிறான். இப்படிச் சண்டை நடக்கிறது. எடிடர், படம் முதல் தரம் என்றார். டைரக்டர், 'படத்தின் முக்கிய பகுதிகளல்ல இவை. கிராமியக் காட்சிகள் சில இவை. படம் பூராவும் தயாரா னால், பட உலகுக்கே பெருமை தரும்' என்று கூறினார். 'இந்தக் காட்சியிலே வரும் காதல் கட்டம், சண்டை, இவைகள் கதையிலே சம்பந்தப்பட்டவைகளல்லவா" என் றார் எடிடர்.