உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பேய் 'சம்பந்தப்படுத்த வேண்டும்" என்றார் டைரக்டர். ஆனால், இந்தக் காட்சிகள் என் சமார்த்தியத்தின் பரிசு! கூறுகிறேன் கேளும்! இந்தக் காட்சிகளை நான் எப்படிச் சிருஷ்டித்தேன் என்பதை என்ற பீடிகையுடன், டைரக்டர், தன் திறமையை விளக்கலானார். "கிராமக் காட்சியைப் படம் பிடிக்க, ஓரூர் என்ற கிராமம் சென்றேன் - கதா நாயகி ஒய்யாரியும், கதாராய கன் ஓங்காரமும வந்திருந்தனர். 'எடிடர் சார்! உங்கள் மன தோடு வைத்துக் கொள்ளுங்கள். ஒய்யாரியின் உண்மைப் பெயர் குப்பி! சிங்காரம் என்பவனைத்தான் ஓங்காரம் என்று புதுப் பெயரிட்டேன்.' கிராமம் அழகாக இருந்தது. கதாநாயகனிடம் கோபித் துக் கொண்டு கதாநாயகி ஊடல் செய்வதாகக் கதை. இதற்காக, கதாநாயகிக்கு ஒரு கிராமத்தானிடம் காதல் ஏற்பட்டதாக ஒரு கற்பனை செய்தேன்- கதாசிரியருக்கு நான் கூறிய பிறகுதான் விஷயம் தெரியும். கிராமத்தான் ஒருவனைக் கண்டேன்- ஒருவாரம் என் னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். ஓய்யாரியும், ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டாள். அந்த இருவருந்தான் இவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது நடித்ததாக! எல்லாம் டிரிக்ஷாட் மரத்தடியிலே அவனைப் படுக்கச் செய்து, படம் பிடித் தேன் முதலில். பிறகு, ஒய்யாரி கையிலே திராட்சையைக் கொடுத்து, அதை அவள், யாருக்கோ தருகிற பாவனையுடன் ஒருபடம் பிடித்தேன். இரண்டையும் இணைத்தவுடன் கதை உரு வாயிற்று! கட்டழகு வாய்ந்த ஒரு கிராமத்தானிடம், மையல் கொண்ட நாகரிக நங்கை, அவனுக்குத் தன் இருதயத்தைக் காணிக்கையாக்கி, அவனுடன் காதல் விளையாட்டு நடத்து கிறாள்'- திராட்சை தருகிறாள்-என்று கதை வளர்ந்தது.