உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிப் போச்சு 61 கிராமப் பெண்ணிடம் ஒரு ஆப்பிள் கொடுத்து, விட்டு விட்டுக் கடிக்கச் சொல்லிக் காட்சிகள் எடுத்தேன். நம்ம கதாநாயகனிடம் வேறோர் ஆப்பிள் கொடுத்து, அதேபோலச் செய்யச் சொல்லிப் படம் பிடித்தேன். இரண்டையும் பக்குவ மாக ஒட்டினேன்—அதன் விளைவுதான்-கிராமப் பெண் நாகரிக புருஷனுடன் நடத்தும் 'பழக்கடி' விளையாட்டு. இது மட்டுமா? இந்த இரண்டு காட்சிகளையும் அவசர அவசரமாகச் சரிசெய்து, பெண்ணுக்கு அவன் சம்பந்தப் பட்ட காட்சியும், அவனுக்கு அவள் சம்பந்தப்பட்ட காட்சி யும் போட்டுக் காட்டினேன். அதன் விளைவுதான். அந்த அற்புதமான சண்டை!” ஓங்கி அறைந்தான் சுப்பு, டைரக்டரை! அடுத்த விநாடி அவர் காலைப் பிடித்துக் கொண்டான். பயந்து விட்டார் டைரக்டர். பிறகு பரிதாபப்பட்டார், செல்லாயி வேலன் விஷயத்தைச் சுப்பு விளக்கியதும். மோட்டார் கிளம்பிற்று ஓரூருக்கு. வேலனைத் தேடிப் பிடித்து, டைரக்டர் விஷயத்தை விளக்கினார். "அப்படிங்களா? ஐயையோ! நான், என் பத்தரைமாத் துத் தங்கத்தைச் சந்தேகித்துப் பதைக்கப் பதைக்கப் பேசி விட்டேனுங்களே" என்று குளறினான வேலன். அவளும் செல்லாயிக்கும் விஷயம் விளக்கப்பட்டது. வேலனை வீணாகச் சந்தேகித்ததற்காக வருந்தினாள். இரு வருக்கும் இடையே ஒரு டைரக்டரின 'வேலை' மூட்டிவிட்ட சந்தேகம், நாளாவட்டத்திலே 'பிசாசு' ஆயிற்று என்பதை வேலனும், சுப்புவும் புரிந்து கொண்டனர்- ஆனால் செங் கோடனுக்கு முடியாதல்லவா? அவன், பூசாரி பொன்னனை வேண்டிக்கொண்டான்- அவன் தன் வழக்கமான வேப்பிலை வீச்சை நடத்தினான்-- இதற்குள் உண்மை விளங்கி, சந்தே கம் நீங்கிவிட்டதால், செல்லாயிக்கு இருந்துவந்த சஞ்சலம் அதன் விளைவாக ஏற்பட்ட மனக்குழப்பம், மயக்கம், ஏக்கம்