உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பேய் ஓடிப் பேரச்சு திகில், யாவும் மறைந்துவிடவே, அவள், 'பழையபடி' சிரிப்புக் காரியானாள். செங்கோடன், பூசாரி பொன்னனுடைய மந்திரபலத்தாலே, தன் பெண்ணைப் பிடித்துக் கொண் டிருந்த மாமரத்துப் பிசாசு விலகிவிட்டது என்றே நம்பி னான் - அதையே கிராமம் பூராவும் கூறினான். அவன் அறி வானா. பாவம், இவ்வளவு அலைச்சலும், ஆலமரத்துப் பிசாசின் வேலை என்பதை!