உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சோணாசலம் பசித்தவனுக்குக் கால், அரை-இப்படிப் பலருக்கும் உதவி செய்து வந்தான். தன் மகளுக்கும் பத்துச் சவரனில் கழுத் துக்குச் செயின், எட்டுச் சவரனில் புதுமோஸ்தர் கைவளை யல் இப்படி நகைகளும் செய்தான். கையிலே பணமும், ஊரிலே பெயரும இருப்பதைக் கண்டு பூரிக்க, பெரிய நாயகி தான் இல்லை -அது ஒரு பெரிய மனக்குறை சோணாசலத் துக்கு. அடிக்கடி தன் மகளிடம் சொல்லுவான். "உங்க அம்மா, பெரியநாயகி இருந்தா. உனக்குச் செயின் செய்த தைக் கண்டு பூரிச்சுப் போயிருப்பா என்று கூறி ஆயாசப்படு வான். பெரியநாயகி, அந்தச் செயின் செய்ததையும் காண வில்லை. பிறகு, அது, மார்வாடிக கடையில் விற்கப்பட்ட கட்சியையும் காணவில்லை! கைவி வியாபாரத்துக்கு நெருக்கடி வந்தது; சோணா சலததின் சொத்தும் கரையலாயிற்று. வியாபாரந்தானே! குவிகிறபோது இருக்கிற வேகத்தைவிட, அதிக வேகமாகத் தானே கரையும் உருப்படி ஒன்று இருபத்து நாலுக்குக் கொள்முதல் - மார்க்கெட் மளமளவென்று இறங்கி, பனி ரெண்டு, பதினொன்றுக்கு வந்துவிட்டது. சோணாசலம், “ஓட்டாண்டியாக நேரிட்டது அதே வருஷந்தான், மக ளுக்கும் கலியாணம். அடுத்த வருஷம் நிலைமை சீர்படும் என்று பார்த்தான் இல்லை! அதற்கு அடுத்த வருஷம், நிலைமை அதைவிட மோசமாகிவிட்டது. உருப்படிகள் ஒவ்வொன்றும், அவ னைப் பிடித்துக் கடிக்கும் பாம்புகளாயின! சோணாசலம். நொடித்துப் போய்விட்டான். பிரபல கைலி வியாபாரி சோணாசலத்தின் ஒரே மக ளைக் கலியாணம் செய்து கொண்ட தீனதயாளன், தீப் பொறி பறக்கும் கண்களுடன் மாமனாரைப் பார்த்துச் சொன்னான்.