உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோணாசலம் 65 "வருஷம் ஏழானாலும் சரி, சீர் சரியாகச் செய்தா லொழிய உன் மகளை நான் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. என்னால் அந்த அவமானத்தைத் தாங்கவே முடி யாது" என்று. உன் மகள்! என் மனைவி என்றுகூடச் சொல்ல அவ னுக்கு மனம் இல்லை! அவ்வளவு கோபம்! சோணாசலம், ஏதேதோ முயற்சி செய்தான். யாரா ருடைய உதவியையோ கோரினான். பலன் இல்லை. அதோ, தள்ளாடிக் கொண்டு போகும் அந்த ஆளைப் பாரும். அவன்தான் சோணாசலம். நோயோ? ஆமாம்! வறுமை நோய்! மருந்து, மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவனுக்குத் தர மாட்டார்கள். இவன் வறுமை நோயினாலேயே நொந்து, நொறுங்கி, நசித்துப் போக வேண்டியதுதான். இவனிடம் இரக்கம் காட்டுபவர் யாரும் இல்லை. இவனிடம் இரக்கம் காட்ட ஒருவராவது இருந்தால், அவன் முகத்திலே அவ்வளவு கவலை தோன்றாது—கண் களிலே கப்பிக் கொண்டிருக்கும் சோகத்தைக் கவனித்து மருந் திட யாரும் முன்வரவில்லை; என்னமோ பேசுகிறான்; கேட் போம். சோணாசலம் சோகக் குரலிலே பேசுகிறான்:- சித்திரவதை செய்கிறானே, எப்படி நான் அதைத் தாங்குவேன். கலியாணமாகி மூன்று வருஷமாகிறது காதலன் ஆயி ரம் ரூபாயாவது சீர் செய்தால்தான் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்செல்ல முடியும் என்கிறான். அடே அப்பா! நான் நொந்து போயிருக்கிறேன்-வியாபாரத்திலே நொடித் துப் போய்விட்டேன்-கொஞ்சம் இரக்கம் காட்டு என்று கெஞ்சுகிறேன்--முடியாது என்கிறான். பொண்ணோ! வீட்டிலே தேம்புகிறாள். பூ-157-செ-3