உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சோணாசலம் மற்றவர் வீடுகளிலே எல்லாம், கொண்டாட்டம்! மரு மகப் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். என் மகளின் மனம் என்ன பாடுபடும்? சோணாசலத்தின் சோகத்துக்காக அந்த ஊரிலே, வழக்க மாக நடைபெறும் எந்தக் காரியமும் நின்று விடவில்லை. பஜனை, பாட்டு, ஆடல், தேர், திருவிழா, எலக்ஷன், சகல மும் சிறப்பாக நடந்து கொண்டே இருந்தன. சோணாசலம் ‘டல்லாகி விட்டான்; ஆகவே அவனிடம் 'உதவி' பெற, யாரும் வருவதில்லை. சித்திரவதை செய்கிறானே பாவி!" என்று சோணா சலம் கூறிக்கொண்டு, பாதை ஓரத்திலே நின்றுகொண்டு, யாருடைய வரவுக்காகவோ, எதிர்பார்த்துக் கொண்டிருந் தான். அவன் எதிர்பாராத ஒருவன், ஆனால் சற்றுப் பழக்க முள்ளவன், அவ்வழி வந்தான். சோணாசலத்தைக் கண்டு, 'லோகாசாரப்படி' பேசினான். (வழியே ஒருவர் வருகிறார்] ஒருவர் : சோணாசலம்/ஏம்பா என்ன இந்த வருஷ மாவது, மாப்பிள்ளைக்கும் உனக்கும் இருக்கிற மனஸ்தா பம் தீர்ந்து வந்திருக்கிறானா வீட்டுக்கு? சோ: வருவதாகத்தான் சொல்லி அனுப்பி இருக்கிறார். ஒருவர்: என்னமோ போ! கல்யாணம் செய்தும் சுக மில்லை. அவனுக்கு இந்த மூணு வருஷமா, கலியாணத்தைச் செய்த கையோடு கையா அவனுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசையைச் செய்து முடிச்சுவிட்டா, அவன் நிம்மதியாக இருந்திருப்பான். வீணாக அவனையும் அலைய வைத்து விடவே, உன் மகளுக்கும்தான் மனதுக்கு விசாரம்; என்னமோ போ. இந்த வருஷமாச்சும், சுகப்படட்டும் மாப்பிள்ளை. [போகிறான்.)