உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோணாசலம் 67 சோ: மடையன்! என் கஷ்டத்தை உணரவில்லை. நான் மாப்பிள்ளை மனதை நோகச் செய்ததாகச் சொல்கி றான். துளியாவது ஈவு இரக்கம் இருந்தா இப்படிச் சொல்ல மனம் வருமா? எங்கே போறது, பணத்துக்கு வந்து ஆர்ப்பாட் டம் செய்யப் போகிறான். வாய்க்கொழுப்பு, சொல்லியும் விட்டேன், வாப்பான்னு. வீட்டிலே வந்து, அந்தப் பெண் எதிரே என் மானத்தை வாங்குவானேன்னுதான் வருகிற பாதையிலே காத்துக்கிட்டு இருக்கறேன்- காலிலே விழுந்தா வது கெஞ்சிக் கேட்டுக் கொள்வோம்னு. என்ன சொல்கி றானோ! [அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான். அவ னைக் கண்டதும் சோணாசலம் மரியாதையுடன் பேசுகிறான்.] சோ : தம்பி ! வாப்பா, வா! வா : இதென்ன, நடுத்தெருவிலேயே உபசாரம்; வீட் டுக்குப் போகலாமே! சோ: போகலாம்பா, போகலாம். வா: புறப்படுங்க! ஏன், யாருக்காகப் பார்த்துக்கிட்டு இருக்கிறிங்க? வண்டியா? வேண்டாம். நான் ரயிலை விட்டு இறங்கி,சாமான்களை எல்லாம் ஓட்டலிலே ஒரு அறை வாட கைக்குப் பேசி வைத்துவிட்டு, நடந்து வந்தேன். எப்படி இருக்கிறீங்க, என்னை நிலைமைன்னு பார்த்து விட்டுப் போக. சோ: என்னைப் பார்த்தா தெரியலையாப்பா உனக்கு. நீ நல்ல குணமுடையவன்--படிச்சவன்-என் மனதைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நானும் மூன்று வருஷமா, எவ்வளவோ முயற்சி செய்துதான் வர்ரேன். வா: அதுக்கென்ன செய்யறது. அதததுக்குக் காலம் கூடி வரவேணுமில்லே. போவுது, இப்ப எல்லாம் சரியாகப் போவுது. என்னென்ன சீர் செய்யறதா உத்தேசம்?