உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சோணாசலம் சோ: அதைப் பத்தித்தாம்பா பேசணும்னு நிற்கறேன். வீட்டிலே கொழந்தையின் முகத்தைப் பார்க்கச் சகிக்கலை. ஊரார் ஏசறதையும் கேக்கப் பொறுக்கலை. பெண்ணை ஏன் இன்னும் அனுப்பலே - மாப்பிள்ளை ஏன் இன்னமும் வரலைன்னு கேட்டுக் கேட்டு, என்னைக் கொத்திவிடறாங்க. கேள்வி கேட்க ஆள் இருக்கே தவிர, இரக்கப்பட்டு, இந் தாப்பா கடனாக இந்தத் தொகையை வைச்சிக்கோ, பிறகு கொடுன்னு உபகாரம் செய்கிறவங்க இல்லை. வா: ஆமாம்! இதென்ன நீங்க பழைய கதையையே பேசறிங்க. சோ : நிலைமை, மாறலையேப்பா. வா: அதுக்கு ஏன் மருமகப்பிள்ளையை வரச்சொன் னிங்க. சரிதான், அவன் சொன்னது சரியாகப் போச்சு. சோ: எவன்? வா: உம் மருமகன்தான். டே! எங்க மாமனாரு சீர் செய்யறதாச் சொல்லி வரவழைத்து, ஏமாற்றி எப்படியா வது பெண்ணைத் தலையிலே கட்டிவிடத் தந்திரம் செய் வாரு. ஆகையாலே நீ முதலிலேபோயி, என்னென்ன சாமான் வாங்கி வைச்சிருக்குன்னு பார்த்துவிட்டு வான்னு, ஓட்ட லிலே தங்கிவிட்டு என்னை அனுப்பினான். சோ: உனக்குக் கோடி புண்யம்பா! இந்த ஏழைகிட்ட இரக்கம் காட்டி, எப்படியாவது என் மருமகனுக்கு நல்ல பேச்சு சொல்லி... வா ; ஐயையோ! நம்மாலே முடியாதுங்க. அவன், ரொம்ப கண்டிப்பான பேர்வழி; யார் சொன்னாலும் கேட்க மாட்டான். சோ: என்னைப் பாரப்பா! என் மக கதறுகிறதைப் பார்த்தாத் தெரியும். கொஞ்சம் இரக்கம் காட்டப்பா.