உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோணாசலம் 69 வா: நான் காட்டி என்னாங்க செய்யறது. அவன் பிடி வாதக்காரன். எப்படியாவது, ஆயிரம் என்பதை ஐந்நூறு. நானூறு,அடெ, ஒரு இருநூறு ரூபாய்க்காவது சீர் செய்து விடுங்க. வேறுவழி இல்லை. எங்கேயாவது கடன் கிடன் வாங் கித்தான் தீரணும்-நான் போய் 'சேதி' யை 'நைசா' சொல்லி, உங்க மாப்பிள்ளையை, அழைச்சிகிட்டு வாரேன்- நீங்க, சாயந்தரத்துக்குள்ளே எப்படியாவது சரிப்படுத்துங்க, நான் வரட்டுமா? சோ: செய்யப்பா! இல்லை. (வாலிபன் திரும்பிப் போய்விடுகிறான்] சோ: படுபாவிப் பய! இவனுக்கும் துளிகூட இரக்கம் ஆண்டவனுக்காவது இரக்கமிருந்தா எனக்குச் சாவாவது வரவேணும் - அதுவும் இல்லை. எங்கேன்னு போய்த் தேடறது பணத்தை. எவன் கொடுப்பான் கடன்? திருடவும் தெரியாது. (தள்ளாடி நடந்து செல்கிறான்.) சகிக்க முடியவில்லையல்லவா? சரி, அவன் நிலைமை என்ன ஆகிறது என்று பார்ப்போம். கண்றாவிக் காட்சியைப் பார்க்க என்னால் முடியா தப்பா என்று கூறிவிட வேண்டாம். இந்த மாதிரி சமயத்திலே கண்களை இறுக மூடிக்கொள் வதால்தான் உலகிலே பஞ்சமாபாதகம் நடைபெறுகிறது. கண்களையும் மூடக்கூடாது, ஊமையாகவும் இருக்கக் கூடாது. அதோ போகிறானே, இரக்கத்தைத் தேடித்தேடிப் பார்த்து, கிடைக்காததால் கதிகலங்கி அவன் இப்போது எதையும் செய்யச் சித்தமாக இருக்கிறான். கொலை- களவு -பொய்-சூது-வஞ்சனை இவை எதுவும் முடியாவிட்டால், தற்கொலை. இவ்வளவுக்கும் அவன் தயார்! அவன் மட்டு மல்ல, உலகிலே அனேகர். இரக்கம் தேடினான் அல்லவா இவன்? இவனே இப்போது இரக்கத்தைக் கைவிட்டு விடு வான்.